Thursday, October 13, 2011

மு. வ. நூற்றாண்டு விழா - கோவை



தமிழ் மொழி.... நல்ல மொழிதான்; ஆனால் அதை

வல்ல மொழியாக ஆக்கினோமா?

கேள்வியின் நாயகன் மு.வரதராசனார்
கல்வியாளர்
இலக்கிய ஆராய்ச்சியாளர்
நாவலாசிரியர்

நாளையும் , நாளை மறுநாளும் கோவை பாப்பநாயக்கன் பாளையம்
மணி மேல்நிலைப் பள்ளி நானி கலையரங்கில் விழா நடைபெருகிறது.....

யாவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்....


http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5.%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE!&artid=491754&SectionID=98&MainSectionID=98&SectionName=Edition-Coimbatore&SEO= 



                                                                  ப்ரியங்களுடன்....
த்யாகு....
த்யாகு புக் சென்டர்



Friday, September 23, 2011

சுஜாதா - கணையாழி கடைசி பக்கங்கள்


சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் ‘நீர்க்குமிழிகள்’, ‘பெட்டி’, ‘கடைசிப்பக்கங்கள்’ எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது.............


”என் எழுத்துக்கு புது வாசகர்கள் அவ்வப்போது பிறந்து வருகிறார் கள். இந்த புதிய ஜன்மங்கள்தான் எனக்கு கிடைக்கும் பரிசுகள். இந்தப் பக்கங்கள் அனைத்தையும் பாரபட்சமின்றி முழுமையாக ஒரு வாசகனின் பார்வையிலிருந்து இப்போது என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்க்கும் எவருக்கும் என் மனமாற்றங்களும் குணமாற்றங்களும் வெளிப்படும். நாற்பது ஆண்டுகளில் ஒருவனுடைய கவலைகள் மாறுகின்றன; பிடிவாதங்கள் தளர்கின்றன; அழுத்தி சொல்லவேண்டிய விஷயங்கள் குறைந்துபோகின்றன. இல்லையேல் என்னை எப்பொழுதோ நிராகரித்திருப்பார்கள்.
கணையாழி தமிழ் இலக்கியப் பத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான முன்னோடி. அதன் வளர்ச்சிக் காலத்தில் கடைசிப் பக்கங்கள் மூலம் கஸ்தூரிரங்கனுக்கு உதவியதில் பெருமைப்படுகிறேன்.”
                                                                                                                  ....................சுஜாதா

Wednesday, September 14, 2011

எரியும் பனிக்காடு - பி.எச்.டேனியல்

 
    ஆனைமலைப் காடுகளில் தலைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத்தோட்டங்களில் 
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
......நீங்கள் கதகதப்பாய் உறுஞ்சிக் குடிக்கும் 
ஒவ்வொரு துளி தேநீரிலும் .............. 
கலந்திருக்கிறது எமது உதிரம்.......
                                ..........ஆதவன்  தீட்சண்யா


உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் 
RED TEA  by P.H.DANIEL ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து ”எரியும் பனிக்காடாக” தமிழுக்கு வந்திருக்கிறது................ 






வாழ்ப்பாறை தேயிலைத்தோட்டங்களின் அழகு, தனிமை, சோகம் 


                                      

Friday, August 5, 2011

60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா



அச்சடித்த புத்தகத்திற்கு இருக்கும் மற்ற கலாசார அடையாளங்களை எலக்ட்ரானிக் முறைகளால் மாற்ற முடியாது................
புத்தகங்கள் செத்துப்போக காகிதம் சாகவேண்டும்.  அதற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்...............  
அதற்குள் புத்தகத்தைப் படித்துவிட்டு,  அதையே சாப்பிடும்படியாக எதாவது கண்டுபிடித்து விடுவார்கள்.........




”பத்தாம் பக்கத்துக்கு அப்புறம் நல்ல டேஸ்ட்டுங்க. அஞ்சாவது அத்தியாயம் லேசா காரம்..........”


             சுஜாதாவின் 60 அமெரிக்க நாட்கள்..............
                                            .............புத்தகத்திலிருந்து (83-பக்கம்)

Tuesday, August 2, 2011

இன்று …........ஆடி மாதம்............. பதினெட்டாம் நாள்......................


















சற்று ஏறக்குறைய 1043-வருடங்களுக்கு முன்பு........
அதாவது 968-ம் ஆண்டு ஆடி மாதம் 18-ம் 
நாள் தொண்டை நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லை சிற்றம்பலத்துக்கு 
மேற்கே அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது வீரநாராயண ஏரி” 

ஏரிக்கரையிலே ஒரு காட்சி.............................. 


ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.





பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து          தந்தநிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ செவந்திப்பூ மல்லிகை முல்லை இருவாட்சி செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும் சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும் வெள்ளப் பாட்டும் கும்மியும் சிந்தும் பாடினார்கள்.
 
"வடவாறு பொங்கி வருது
          வந்து பாருங்கள் பள்ளியரே!
     வெள்ளாறு விரைந்து வருது
          வேடிக்கை பாருங்கள் தோழியரே!
     காவேரி புரண்டு வருது
          காண வாருங்கள் பாங்கியரே!


நன்றி...........

       ..........கல்கியின் பொன்னியின் செல்வன்..........


..........தமிழர் மரபின் வழி வந்த 
      உன்னதமான நாள்...........



வாழ்த்துக்கள்..........
ப்ரியங்களுடன்
த்யாகு.........







Tuesday, June 28, 2011

இயற்கை மற்றும் வன உயிரின ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு


வன உயிரின புகைப்படகண்காட்சி - கறுப்பு வெள்ளையில்.........
இன்றும் நாளையும் 29,30 ஜீன் 2011
                 10 am to 6 pm
PSG மேலாண்மை கல்லூரி வளாகம் .........பீளமேடு


பிரபல கானுயிர் புகைப்பட நிபுணர்கள்
மா. கிருஷ்ணன்
டி.என்.ஏ. பெருமாள்
இவர்கள் எடுத்த அரிய புகைப்படங்களின் கணகாட்சி

30.06.2011 வியாழன் மாலை 5 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு

மா. கிருஷ்ணன் நினைவலைகள்   -  டி.என்.ஏ. பெருமாள்





 







டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - பிரபலயானை ஆராய்ச்சியாளர்
(எழுத்தாளர் ஜெயமோகன் படைத்த யானைடாக்டர் கதையின் கதாநாயகன்). நினைவலைகள்

                                             -
 கலைவாணன்(முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர்)


கானுயிர் ஆர்வலர் மற்றும் சூழலியல் எழுத்தாளர் திரு. தியோடர் பாஸ்கரன் கலந்து கொள்கிறார்


 














தங்கள் வரவு........... நல் வரவாகுக...........

தியாகு புக் சென்டர்.












மா.கிருஷ்ணன் (30.06.1912 - 18.02-1996)
இயற்கையியல் பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ்பெற்றவர். பத்மஸ்ரீ, ஜவகர்லால் நேரு நல்கை
முதலிய பெருமைகள் அவரைத் தேடி வந்தன. தமிழின் தொடக்க கால நாவலாசிரியர்களில் ஒருவரா அ.மாதவையாவின் மகன்.
1950,60களில் தமிழ் இதழ்களிலும் கலைக்கள்ஞ்சியத்திலும் அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை

நாவல் - கதிரேசன் செட்டியாரின் காதல் - 1996
கட்டுரை - மழைக்காலமும் குயிலோசையும் - 2002


மழைக்காலமும் குயிலோசையும் - புகழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா.கிருஷ்ணன் கலைக்கள்ஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் “வேடந்தாங்கல்” குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படித்தி மயக்கமூட்டும் நடை
ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத்தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது. அவரது எழுத்துக்கள் தமிழகம் சார்ந்தவை. நமது செல்வங்கள் பற்றியவை. தமிழ்  அறிவுப்புலத்திற்குப் பங்களிப்பவை. கானுயிர்களே உலகைக் காக்கும் என்னும் உணர்வு உறுதிப்படும் இந்நாளில் அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் தேவை. பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு மா.கிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமானவை...........

Wednesday, May 25, 2011

யுவன் சந்திரசேகர் - கரட்டுப்பட்டிக்காரர்

வழக்கமான கதை சொல்லும் பாணிகளை நிராகரித்துவிட்டு வாழ்வின் அழகையும் அவலங்களையும் , ஜீவத்துடிதுடிப்புடன் பதியவைப்பதில் கரை கண்டவர்.

கதையின் ஆதார அழகியலையும் சுவாரசியத்தையும் விரித்தபடியே அதன் வழக்கமான வழிமுறைகளை கலைத்து மாற்றி அமைக்கும் வித்தை தெரிந்தவர்..........


யுவனின் கவிதைகள்.....

                “74 கவிதைகள்”.......
                ”புகைச்சுவருக்கு அப்பால்”......
                ”கைமறதியாய் வைத்த நாள்”.....





ஒளிவிலகல் - சிறுகதை தொகுப்பு
உற்ற தோழி............ இந்த கதைகளின் முதல் வாசகி.........,
தன் மூத்த சகோதரி..........
திருமதி கல்யாணிமோகனுக்கு
சமர்ப்பிக்கப்பட்ட 12 சிறுகதைகள் கொண்ட
முதல் தொகுதி..........


ஏற்கனவே - சிறுகதை தொகுப்பு
சம்பிரதாயமான, வெளிப்படையான..........
 இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும், பிரக்ஞையாலும்............ தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை........
 யுவன் சந்திரசேகரின்.............
 இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது...............


யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான...........
37 சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது........

...............கனவுன்னா, தூங்கும்போது வரும்.
பகல் கனவு முழிச்சிண்டிருக்கும்போது வரும்.................


குள்ளச்சித்தன் சரித்திரம் -  முதல் நாவல்


குள்ளச்சித்தன் என்று பெயருடைய ஒரு சித்தபுருஷரை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். சிலருக்கு அவர் வாழ்க்கையின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். சிலருக்கு அவர் மெய்ஞானம் அளிக்கிறார். அவர் ஒரே சமயம் பல இடங்களிலும் காட்சியளிக்கிறார்

பகடையாட்டம்
...........சதுரங்க காய்களுக்குச் சுய சிந்தனை கூடாது என்பது முதல் பாடம்


சாமானியர்கள் சாவதின் துக்கம், அவரவர் குடுப்பத்தின் சரித்திரதில் மட்டும்தான் பதிவாகிறது

......வாழ்வதைவிட மரணமொன்றும் அத்தனை பயங்கரமானது அல்ல............


கானல்நதி

யுவன் சந்திரசேகரின் கானல் நதி கலையின் எல்லையற்ற பிரகாசத்திற்கும் மனித இருப்பின் முடிவற்ற பெரும் துயருக்கும் இடையே ஒரு அக்னி நதியாக உருக்கொள்கிறது. இந்த நதி காலங்காலமாக மனித அனுபவத்தின் மீள முடியாத கனவொன்றை நம் நெஞ்சில் படரச் செய்கிறது. தனஞ்செயனைத் துரத்தும் விதியின் நிழல் எது? அது திரும்பத் திரும்ப தணியாத விம்முதல் மட்டும்தானா, அல்லது வீழ்ச்சிகளின், மன முறிவுகளின் யாரும் இனம் காண முடியாத விதியின் ரகசியங்களா? வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்த நாவல்
வெளியேற்றம்
"வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றனகுடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றனஅவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன
ஆனால் இதற்கு அப்பால் தன்னிசையாக வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அவருடைய, அவரைச் சுற்றி வலைப்பின்னலாய்ப் படிந்திருக்கும் எண்ணற்ற மனங்களுடைய கதையும்கூட..........

மணற்கேணி
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கேள்வியின் விளைவே யுவன் சந்திரசேகரின் இந்த நூறு குறுங்கதைகள். சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர்கொள்ளக்கூடிய கணங்கள் இக்கதை களின் ஆதாரமாக இருக்கின்றன. மிகக்குறைவான வாக்கியங் களில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள், விவரணைகள், உரையாடல்கள் குறுங்கதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை உணர்த்துகிறது. இவை குறுங் கதைகளாக எழுதப்பட்டபோதும் அவற்றிற்கிடையே ஓடும் பொது நீரோட்டம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது.


கடல் கொண்ட நிலம்
இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள், வாசகனை ஒரு புதிய அனுபவத்தை நோக்கி நகர்த்துபவை. திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுபவை. வாழ்வில் நாம் கண்டறியாத ஒரு புதிய உள் வெளிச்சத்தை நமக்கு அறிமுகப்படுத்துபவை. இக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கும், வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு மனிதர்களின் அனுபவங்கள் ஒரு புதிய பயண அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. அனுபவித்தறியாத ஒரு நிறைவைத் தருகின்றன


நீர்பறவைகளின் தியானம்
ஒரு கதையில் ஒரே கதையை மட்டும் சொல்வதில் நம்பிக்கையற்றவர் யுவன் சந்திரசேகர். வெவ்வேறு நிலக்காட்சிகளையும் சம்பவங்களையும் மனிதர்களையும் தனது கதைமொழியின் விசித்திரமான அடுக்குகளுக்குள் கலந்துவிடுவதன் மூலம் ஒரு புதிய வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத இழைகளைக் கண்டடைவதன் மூலம் உருவாகும் புனைவுகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள்.


Wednesday, April 20, 2011

கல்கி - கோடைவிடுமுறை மட்டுமல்ல என்றுமே குதூகலமாக படிக்க வேண்டிய புத்தகங்கள்


கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் சிவகாமியின் சபதம்

கல்கியின் பார்த்திபன் கனவு


பொன்னியின் செல்வன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழசாம்ராஜ்யத்தின் வரலாறு ..............

இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்க்கும் வீரமிகு தமிழ் சமுதாயத்தின் வரலாறு   கல்கியின் கைவண்ணத்திலே ...................

சுந்தரசோழரின் மூத்த மகனான
ஆதித்தகரிகாலனின் மர்மம் நிறைந்த மரணம். ராஜராஜ சோழனாக உருவெடுத்த பொன்னியின் செல்வன், தோழமையுடன் வந்தியதேவன்... இவர்களுடன் வானதியும் குந்தவையும் .........
கடல் இளவரசியாக பூங்குழலியும் , மர்மசூழலின் மத்தியில் நந்தினி......... வீரபழுவேட்டயர்கள் ,
கட்டிகாத்த முதன் மந்திரி அநிருத்தபிரமராயர் வைணவஆழ்வார்கடியான்,  மணிமேகலை ............. இவர்கள் அனைவரும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் சமுதாயத்தில் வாழ்வார்கள்.....

சிவகாமியின் சபதம்
முன்னும் அவனுடய நாமம் கேட்டால்...
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டால்...
திருநாவுகரசனின் திருப்பதிகத்துக்கு அபிநயம் பிடித்த .... அபிநய சுந்தரி சிவகாமி தன் சபதத்தை முடித்தாளா.........?
பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் மாமல்ல சக்ரவர்த்தி சிவகாமியின் சபதத்தை முடித்துக் கொடுத்தாரா...!

சிவகாமியின் 
கண்களில்........................ 
 
பார்த்திபன் கனவு
சோழசாம்ராஜ்ஜியத்திற்க்கு வித்திட்ட பார்திபசோழனின் கனவு........... முன்று நூற்றாண்டுகளுக்கு பிறகு சோழநாட்டின் வீரசிம்மாசனம் ஏறிய ராஜராஜ சோழன், அவனுடய புதல்வனான ராஜேந்திரசோழன் இவர்களுடைய காலத்தில் நனவானது.

Monday, April 18, 2011

நாஞ்சில் நாடன்............ படைப்புகள்.............



அரசியலும் அதிகாரமும் கட்டவிழ்த்துவிடும் சமூக அநீதிகளைச் சகித்துக்கொண்டு சுரணை கெட்டுக் கிடக்கும் தமிழ்ச்சமூகத்தின்
அற உணர்வைத் தட்டி எழுப்புவதை தன் எழுத்தின் காரியம் என்று உறுதி கொண்டிருப்பவர்
நாஞ்சில் நாடன் ......
மண்ணில் இருந்தும் மனிதரிலிருந்தும் முளைத்து எழுபவை அவரது கதைகள்.......
நிராகரிப்பின் துயரிலிருந்து திரண்டு எழுவது அவரது மொழி ..... அவரது மெய்யான வாசகன் அவருடைய  ஒவ்வொரு படைப்பையும் படித்துமுடித்தவுடன் தலை குனிவையே அடைவான் ..............
இதுகாறும் சமூகம் சார்ந்தும் சகமனிதர்கள் சார்ந்தும் பொறுப்பின்மையுடன் நடந்து கொண்டமைக்காக உள்ளூர வருந்துவான்.
 வாசகனின் இந்த சுயபரிசீலனையை சாத்திய படுத்துவதால்தான் நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள் இலக்கியமாக ஆகின்றன....

நன்றி - ”மணல்கடிகை - எம் கோபாலகிருஷ்ணன்” ................ சூத்திரதாரி.


நாவல்கள்
தலைகீழ் விகிதங்கள்
 என்பிலதனை வெயில் காயும்
மாமிச படைப்பு
மிதவை
சதுரங்கக் குதிரை
எட்டுத்திக்கும் மதயானை

 சிறுகதைகள் 
தெய்வங்கள் ஒநாய்கள் ஆடுகள்
வாக்குபொறுக்கிகள்
பேய்க்கொட்டு
பிராந்து
முத்துக்கள் பத்து
நாஞ்சில் நாடன் கதைகள்
சூடிய பூ சூடற்க - சாகித்திய அகாதமி பரிசுபெற்ற நூல்
கான் சாகிப்


கட்டுரைகள்
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
காவலன் காவான் எனின்
தீதும் நன்றும்
திதம்பரம்

கவிதைகள் 
                                     மண்ணுள்ளிப் பாம்பு
                                     பச்சைநாயகி


  ம்பராமாயணக் காவலர் 
நாஞ்சிலாரின் எழுத்துப்பணி தொடரும்................
www.nanjilnadan.wordpress.com






Saturday, April 2, 2011

கடவு - திலீப் குமார்


பதினாலு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.........
ஒவ்வொன்றும் சிறுகதை உருவத்துக்கு அப்பார்ப்பட்ட இலக்கிய அனுபவத்தை தருபவை.
இவருடய நகைச்சுவை தனிரகம்.
வறுமை, சிறுமை, கோபம்,பசி,குழப்பம்.......
இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையவை. ஒரு தனிகாரணம் என்றில்லாமல் பல பன்புகளின் தனித்துவமான சேர்க்கையால் இவருடய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன......

நன்றி ..........அசோகமித்திரன். 



மறுபக்கம் - பொன்னீலன்


இன்னொரு புதிய தரிசனம்,குமரிமாவட்டத்தின் மண்வாசனையை நுகரதந்தபடியே அம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை செதுக்கித்தருகிறது.
நாட்டார் கதைகள், நாட்டார் மரபுகள் என பழையாற்றின் வெள்ளம்போல் குருத்தோலை மணத்தோடும், நுரை பொங்கும் கள்ளின் காரத்தோடும், மீனின் சுவையோடும் ஒரு நாவல்........

ஜெயமோகனின் புத்தம் புதிய த்ரில்லர் “உலோகம்” - வரவேற்க்கிறோம்

                                                     உலோகம் - ஜெயமோகன்


உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.

கிருஷ்ணா........கிருஷ்ணா......... இந்திரா பார்த்தசாரதி

 கிருஷ்ணன், கிருஷ்ணனாகப் பிறக்கவில்லை ...... உருவாக்கப்பட்டான்......................

இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா கிருஷ்ணா', மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. இ.பா.வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான். கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார். அந்தக் கனவின் சமகால நீட்சி, இந்த புத்தகம்......

தலைமுறைகள் - நீல பத்மநாபன்

நீல.பத்மனாபனின் தலைமுறைகள் எனும் நாவல் நாகம்மை எனும் பெண்ணைச் சுற்றிச் சுழன்றாலும், அதனுடைய பரப்பு ஒரு மூன்று தலைமுறைகளை உள்வாங்கிக் கொண்டு உருவாகி அமைகிறது. அதுபோல, குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டுமல்லாமல் தொடர்புடைய பல குடும்பங்கள் புனையப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் நாகம்மை, திரவி ஆகியோர் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்றால், நாகருப்பிள்ளை இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.உண்ணாமலையாச்சி மூத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவள். இம்மூன்று தலைமுறையினரும் ஒரே குடும்பத்தில் இணைந்து வாழ்கின்றனர். அது ஒரு சிறிய குடும்பம். ஆனால் அதுதான் நாவலின் தலைமையான குடும்பம். இதனோடு இணைந்து வருவது உண்ணாமலை ஆச்சியின் அண்ணாச்சி கூனாங்காணிப் பாட்டாவின் குடும்பம். அவருக்கு இரு மனைவிகளும் , வெளியே ஒரு வைப்பாட்டியும் உண்டு. மூவர் வழியாகவும் பிள்ளைகுட்டிகள், பேரன் பேத்திகள் உண்டு. இந்த இரு குடும்பங்களுமே நாவலின் முக்கியமான குடும்பங்களாகும்.  உறவால் மட்டுமல்லாது கதைப் போக்கின் இணைவினாலும், முக்கியத்துவத்தினாலும் அவை பிணைப் புடையவை. மூத்த தலைமுறைகளைச் சித்தரிக்கின்ற மூன்றாவது குடும்பம், நாகம்மையின் தந்தை நாகருப்பிள்ளையின் மாமனாராகிய பத்மனாபப் பாட்டாவின் குடும்பமும், இந்தச் குடும்பங்களின் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்களும், ஒரே சமூகத்தில்(அதாவது ஏழூர்ச் செட்டியார்கள் சமூகத்தில்) ஒரே காலகட்டத்தில் வாழ்பவர்கள் என்றாலும் மாறுபட்ட வாழ்க்கைப் போக்குகளையும், வாழ்க்கை மதிப்புகளையும் கொண்டவர்கள்.

எனது நூலகங்கள் – எம்.கோபாலகிருஷ்ணன் - சூத்ரதாரி


கோவை நகரை அறிந்தவர்களுக்கு ரத்தின சபாபதி புரத்தின் மையமான திருவேங்கடசாமி சாலையின அழகையும் குளுமையையும் குறித்துச் சொல்லத் தேவையில்லை. அகன்ற 60 அடி சாலை. இருமருங்கும் செழித்து வளர்ந்த அடர்ந்த மரங்கள். பல இடங்களில் சாலை மொத்த்த்தையும் கிளைகள் வளைத்து மூடியிருக்கும். நிழலின் மெல்லிய இருளில் நிதானப்பட்டிருக்கும் இந்தச் சாலையில்தான் தியாகு புத்தக நிலையம் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்னரே நான் திருப்பூரிலிருந்த சமயத்திலேயே தியாகு புத்தக நிலையம் குறித்து நண்பர் ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்தகங்களைத் தேடி அலைந்துகொண்டிருந்த காலம். சனிக்கிழமைதோறும் கோவைக்குச் சென்றுவிடும் கெட்ட பழக்கம் கோவையில் கேஜி தியேட்டரில் அப்போது தரமான மலையாளப் படங்களைப் பார்க்க முடியும். ஒரு சினிமா பார்த்துவிட்டு, டவுன்ஹாலில் பழைய புத்தகக் கடையில் சில மணி நேரங்கள் செலவாகும் (இப்போது அந்தக் கடைகள் உக்கசத்திற்குச் சென்றுவிட்டன. ஆனால் இங்கே கிடைத்த பல புத்தகங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டன.) அங்கிருந்து சாய்பாபா காலனி. அங்கே இரண்டு புத்தகக் கடைகள் இருந்தன. அங்கே ஒரு மணிநேரம் தேடவேண்டியது. பிறகு லாலி ரோடில் இருக்கும் மைய நூலகத்திற்குச் சென்று கொஞ்ச நேரம். இரவு ஊர் திரும்ப வேண்டியது. ஆனால் அந்தக் கால கட்ட்த்தில் தியாகு புத்தகக் கடையை எப்படியோ நான் தவறவிட்டுவிட்டேன்.
பிறகு நான் கோவைக்கு மாற்றலாகி வந்தேன்.  மணல் கடிகைநாவல் வெளியாகி சில மாதங்கள் ஆகியிருந்தன. ஆர்.எஸ்.புரத்தில்தான் என் அலுவலகம். ஒரு நாள் மாலை நான் தியாகு புத்தகக் கடைக்குச் சென்றேன். புத்தக அடுக்குகள் கொண்ட மேசைக்குப் பின்னால் இருந்தவர் வாடிக்கையாளர்களைக் கவனித்து கொண்டிருந்தார். புத்தகங்களைக் குறித்தும் வாசிப்பது குறித்து நிறைய வாசகங்களைப் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வித்த்தில் எழுதி மாட்டப்பட்டிருந்தன. நல்ல புத்தகங்கள் நாம் வாசிக்கும் போதே நம்மையும் வாசிக்கச் செய்கின்றனஎன்று நான் ரசனைஇதழில் ஒரு நூல் விமர்சனத்தில் எழுதியிருந்த வாசக மொன்றும் அந்த வரிசையில் இருந்த்து.
எனக்கு என்ன வேண்டும் என்று தியாகு கேட்ட போது, அந்த வரிகளைச் சுட்டிக் காட்டி யார் எழுதியது சார் இது என்று கேட்டேன். இதழைக் குறித்தும், புத்தக விமர்சனம் குறித்தும் அதை எழுதியது ஒரு நாவலாசிரியர், கோபாலகிருஷ்ணன் என்று பெயர் என்று விவரமாகச் சொன்னார். நான் தான் அந்த கோபாலகிருஷ்ணன்என்று மெல்ல சொன்னேன். இருக்கையிலிருந்து எழுந்து, ஈரம் மினுங்கிய உள்ளங்கைகளால் என் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டார். என் நாவல் குறித்தும் அந்த நாவலைப் பலருக்கும் பரிந்துரைத்த்து குறித்தும் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தியாகு புத்தக நிலையத்தை ஏறக்குறைய 30 ஆண்டுகளாக நட்த்திவரும் தியாகராஜன் அடிப்படையில் ஒரு நல்ல வாசகர். புத்தகங்களின் மீது அளவற்ற பிரியம் கொண்டவர். இதைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாதேஎன்று அவ்வப்போது சொல்லும் அளவிற்கு புத்தகங்களோடு ஒன்றிப் போனவர். ஒரு லெண்டிங் லைப்ரரி என்ற அளவில்  அதை அணுகினாலும்கூட அங்கிரிக்கும் புத்தகங்களின் வகைப்பாடு நம்மை பிரமிக்கச் செய்பவை. தமிழ் புத்தகங்களைக் காட்டிலிம் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகம். வாசகர்கள் அதிகமும் கேட்கும் பிரபல ஆங்கில நாவலாசிரியர்களோடு சேர்த்து மார்க்வெஸ்ஸையும்,சரமகோவையும், குந்தர் கிராச்ஸையும் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் எல்லா நூல்களையும் இங்கே பார்க்க முடியும்.ராமசந்திரகுகா, அஸ்கர்அலிஎஞ்சினியர்
குஷ்வந்த சிங், அருந்ததி ராய், என்று ஆங்கிலக் கட்டுரைகளை அங்கே நான் பார்த்திருக்கிறேன். அரசியல், ஆன்மிகம், விளையாட்டு, சோதிடம், வானவியல், சுயசரிதம், சமையல், அழகுக்கலை என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும். யாராவது ஒருவர் புதிய நூல் ஒன்று வெளியாகியிருப்ப்து குறித்து வந்து சொன்னால் அடித்த சில நாட்களில் அது தியாகுவின் கடையில் கிடைக்கும். நல்ல ஒரு புத்தகத்துக்கு நிறைய வாசகர்கள் உண்டு என்றால் கூடுதல் பிரதிகளை ஏற்பாடு செய்வார். அவருடைய நூலகத்துக்கு வரும் வாசகர்களின் ரசனையை அறிந்து அவர்கள் விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை அறிமுகம் செயவார். அவருடைய வாசகர்களில் பலர் தேர்ந்த படிப்பாளிகள். அந்த ரசனையை வள்ர்த்தெடுத்ததில் தியாகுவிற்குப் பெரும் பங்கு உண்டு. குழந்தைகளுக்காக என்று தனியாக ஒரு பிரிவு உண்டு.
தியாகுவிற்கு அந்தப் புத்தக நிலையம்தான் தொழில். ஒரு தொழிலாக மட்டும் அதைத் திறம்பட நட்த்துவது என்பது இப்போதைய காலகட்ட்த்தில் கடினமாவது. ஆனால் புத்தகங்கள் மீதான அவருடைய ஆழமான உறவு வியாபார நோக்கத்திலான லாப நட்டங்களைப் பொருட்படுத்தாத ஒரு பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு உணர்வுநிலை தொழில் சார்ந்த கணக்குகளிக்கு எதிரானது. எப்போதுமே  லாபநஷ்டங்களைப் பார்க்காத சிலரின் அக்கறைகளே சமூகத்திற்கு மேன்மையான விஷயங்களைச் சாத்தியப் படுத்துக்கின்றன. புத்தகங்களின் மீதான அந்த உற்வைத் தியாகுவின் கடையில் உள்ள புத்தக அடுக்குகளைப் பார்த்தாலே தெரியும். மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படும் நூல் நிலையம் அது. மிக லேசாக எப்போதும் ரமண மந்திரம் ஒலிக்கும் அந்தச் சூழல் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இதமான ஒன்று.
தியாகுவிற்கு, தான் வாங்கி வைத்திருக்கும் சில நூல்களுக்கு ஒரு வாசகர்கூட இல்லை என்று தெரியும். புத்தம் புதுசாக அது அப்படியே தட்டில் உட்கார்ந்திருக்கும். ஆனாலும் அதைத் தெரிந்துதான் வாங்கியிருப்பார். இருக்கட்டுமே,யாராச்சும் படிக்காமயா போயிருவாங்கஎன்று சிரிப்பார்.
தியாகுவின் நூல் நிலையம் கோவையின் மிகத் தரமான வாசகர்கள் ஒன்றுகூடும், முக்கியமான ஒரு புள்ளி. திட்டமிடப்படாத சந்திப்புகள் பலவற்றில் அப்படியான பல்வேறு நண்பர்களை நான் சந்தித்ததுண்டு. எழுத்தைக் குறித்தும் வாசிப்பைக் குறித்துமான பல கேள்விகளுக்கான ஆழமான பதில்களைத் தந்த உரையாடல்கள் பலவும் சாத்தியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாள் என்று எதுவுமில்லாது, ஒரு தொலைபேசிச் செய்தி வழியாக நண்பர்கள் மாலையில் ஒன்று கூடிப் பேசிக்கொள்வோம். அன்னபூர்ணாவின் காப்பி சுவைக்கு தியாகு அடிமை (தனிக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்) காப்பிக்குபிறகு நூல் நிலைய வாசலில் நின்றபடியே உரையாடல் நெடுநேரம் தொடரும். புகைப்பட்த்துறை, உலக சினிமா, வாசிப்பு, சுற்றுச்சூழல், கானுயிர், தொழில்நுட்பம் என்று அவரவர் துரையில் முக்கியமான பங்களிப்புகளை, வெளியே தெரியாமல் தம்பட்டம் அடிக்காமல், செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பும் தியாகு புத்தக நிலையமும்தான்.

புத்தக அறிமுகம்,விமர்சனம்,வெளியீடு விழா போன்ற சம்பிரதாயங்களில் அசலான வாசகர்களை நாம் சந்திக்க முடியாது. நல்ல ஒரு வாசகன் இதுபோன்ற இடங்களைவிட்டு ஒதுங்கி ஓடுபவன். அத்தகைய நல்ல வாசகர்களை த்யாகு புத்தக நிலையம் போன்ற இடங்களில்தான் நாம் பார்க்க முடியும். ஒரு மாலைநேரத்தில் தனக்குத் தேவயான புத்தகத்தை மிகப் பொறுமையாகத் தேடி எடுத்துச் செல்பவன் அவன். அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அவனால் சொல்லப்படும் மிகச் சில சொற்களே அந்தப் புத்தகத்தைக் குறித்து உண்மையான விமர்சனமாக இருக்கும். எழுத்தாளனின் காதில் அவை விழாமலேகூடப் போகலாம். ஆனால் அந்தப் புத்தகத்தின் இருப்பை அர்த்தப்படுத்துவதும் கேள்விக்குள்ளாக்குவதும் அந்தச் சில சொற்களே.

த்யாகு புத்தக நிலையத்தின் வாசலில், மரங்களின் கிளைகள் மிக மெதுவாக அசைந்திருக்க, வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளி பட்டும் விலகியும் ஒட, நண்பர்களிடம் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது பல சமயங்களில் எனக்கு அத்தகைய சில சொற்கள்தான் உரத்து ஒலிப்பது போல இருக்கும். அன்றிரவு என்னை எழுதவோ, எழுத முடியாமலோ செய்பவை அச்சொற்களே!

ஒரு வாசகனாக என்னை உருவாக்கிய பாதைகளைத் திரும்பிப் பார்க்கும் இந்த முயற்சியில் நான் சொல்லியிருப்பவை கொஞ்சமே. ஒவ்வொரு வாசகருமே இதுபோன்ற பாதைகளின் வழியாகத்தான் கடந்து வந்திருப்பார்கள். ஏதாவது ஒரு நூலகம், யாராவது ஒரு நண்பர் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நம்மை அவ்வாறு திசைமாற்றியிர்ப்பார்கள். நாமும் அப்படி யாருக்கேனும் ஒரு திசை மாற்றத்தைச் சாத்தியப்படுத்த முடியுமானால் அதுவே நாம் கடந்து வந்த பாதைகளின் பொருளாக அமையும்.


          சூத்தரதாரி எம்.கோபாலகிருஷ்ணன்  மணல் கடிகை

திட்டமிடப்படாத உணர்தல்தான், அடையாளம் காணப்படும் நல்ல வாசகன்......
அந்தகனம் தரும் நிறைவு உணர்பவர்களுக்கே புரியும்.
புரிதலுடன் பதியப்பட்ட எழுத்துக்களின் கோர்வை, வார்த்தை ராகங்களாக மனதினில் நிறைவையும் , நெகிழ்வையும் தந்தது..........

     ப்ரியங்களுடன்
     த்யாகராஜன்.

த்யாகு புக் சென்டரில் ஜெயமோகன்…........


எங்கள் நூலகத்திற்க்கு வருகைபுரிந்த ஜெயமோகனுடன் சில மணித்துளிகள்.........

எண்ணிலடங்கா எழுத்து தச்சர்கள் செதுக்கிய புத்தகங்களின் நடுவே புன்னகையுடன் ஜெயமோகன்,  


20-12-2010 திங்கள் காலையில் உற்சாகத்துடன் த்யாகு புக் சென்டருக்குள் புகுந்தேன், விளக்கேற்றி சாமிகும்பிட்டு நெற்றியில் திருநீரிட்டு வேலைகளை ஆரம்பித்தேன். முதல் காரியமாக த்யாகுசாருக்கு தொலைபேசியில் அழைத்தேன், அன்று அவர் திருவண்ணாமலை போகவில்லை, 10 மணிக்கு த்யாகுசாரும்,சுரேஷ்சாரும் நூலகத்திற்க்குள் வந்தார்கள், விஷ்ணுபுரம் விருதுவிழாவை பற்றி அபிபிராயங்கள் இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டார்கள். அப்போதுதான் தெரிந்தது ஜெயமோகன் ஊரில் இருக்காங்க என்று... தெரிந்தவுடன் த்யாகு புக் சென்டருக்கு அவரை அழைத்து கொண்டுவர முடிவாயிடுச்சு, சந்தோஷத்துடன் நானே அவரை அழைத்து வருகிரேன் என்ற பொறுப்பை ஏற்று கொண்டார் சுரேஷ்சார்.... அவர் ஜெயமோகன் பேச்சுக்கு அடிமையானவர்.... இரண்டு தினங்களாக வேலைக்கும் வீட்டுக்கும் போகாமல் அவருடனே இருக்கிறார்.
ஜெயமோகன் வருகிறார் என்று தெரிந்தவுடன் சுறுசுறுப்பாக வேலைகள் ஆரம்பமாகிவிட்டன, த்யாகுசாரின் நண்பர்கள் கூட்டத்திற்க்கும் அழைப்புக்கள் சென்றுவிட்டன. இருக்கைகள் எடுத்து துடச்சு அடுக்கப்பட்டன. 11 மணிக்கு டான் என்று வந்து சேர்ந்தார் நண்பர் செல்வேந்திரன், அவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர், அவரும் எங்கள் வேலைகளில் பங்குகொண்டார், இனிப்பும், காரமும் வாங்கி வந்தார் த்யாகுசார்..........
11.30 மணிக்கு ஜெயமோகனைக் காண ஆர்வத்துடன் வந்தார் எங்கள் கலைவாணி அக்கா, அதற்க்குப்பின் மித்திரன் சார் அவர்களும் வந்துசேர்ந்தார், மற்ற நண்பர்களை அவரே தொலைபேசியில் அழைத்தார், ஆனந்துசாரின் மாணவன் அருண் வந்தார்...
அமைதியாக வந்து அமர்ந்தார் உலக புகழ்ப்பெற்ற புகைப்பட நிபுணர் ஜெய்ராம்சார் அவர்கள்,  கோணங்கள் பிலிம் சொசைடியில் இருந்து ஆனந்த் சார் வந்திருந்தார்,       
பாலு என்கிற கோயமுத்தூர் பாலசுப்ரமணியம் அவர்களும் வந்து சேர்ந்தார், இதுக்கு எதற்க்கும் சம்பந்தமில்லாமல் யதேச்சையாக வந்து மாட்டி கொண்டார் நம்ம மாதவன்சார் அவங்க..... மற்றவர்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.

    நூலகத்திர்க்குள் புத்தகம் எடுப்பவர்களின் கூட்டம் ஒரு பக்கம் நண்பர்கள் கூட்டம் ஒரு பக்கம் என திருவிழாக்கோலம் பூண்டது எங்கள் நூலகம்...........

ஜெயமோகனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். அவரை கூட்டிகொண்டுவரும் பொருப்பை ஏற்று இருந்தார் சுரேஷ்சாரும், சிவகுமார்சாரும், 12.30 மணியளவில் நூலகத்திற்க்குள் வந்து சேர்ந்தார் எங்கள் விழா நாயகன்
திரு.ஜெயமோகன் அவர்கள்.
உற்சாகத்துடன் வரவேற்றார் எங்கள் த்யாகுசார், அவரின் முகத்தில் ஒரு சின்ன குழந்தையின் குதூகலம் எங்களை அறிமுகப் படுத்தினார்.......
நூலகத்தை முதலில் சுற்றி பார்க்க கிள்ம்பி விட்டார், அவசரமில்லாமல் நிதானமாக ஒவ்வொரு ராக்கையும் பார்த்து கொண்டுவந்தார், அவருடன் வேறு சில நண்பர்களும் இருந்தார்கள். நிதானமாக வந்து உக்காந்து பேச்சை ஆரம்பித்தார், கூடவே இனிப்பும் காரமும், டீயும் பகிர்ந்து கொண்டார்கள்.
அவருக்கு ஸ்பெஷல் பிளாக் டீ........ 
நிறுத்தாமல் பேசிகொண்டே இருந்தார் அவரின் மலையாளமும் அழகாகத்தான் இருந்தது. இதற்கிடையில் நாஞ்சில்நாடன் அவர்களுக்கு சாகித்திய அகாதெமி விருது உருதிசெயப்பட்ட விஷயத்தை செல்வேந்திரன் அவர்கள் சொன்னார் எல்லோருக்கும் இரட்டிப்பு சந்தோஷம்.
நானும் அக்காவும் ஒரு ஓரத்தில் இருந்து அவர் பேச்சை கவனித்தோம். என் காதில் எந்த பேச்சும் விழவில்லை.....
அவரைப் பார்த்ததே சந்தோஷம் என்று நினைத்தேன். அவரின் புத்தகம் படித்ததே இல்லை, அவருடன் பேசியதில்லை எல்லாமே கேள்வி ஞானம் மட்டும்தான்......... அவரைப் பார்த்ததும் வந்த சந்தோஷத்திர்க்கு அளவே இல்லை..... ஒரு மாபெரும் எழுத்துக் கலைஞனை கண்ட சந்தோஷமாக இருக்கலாம், வாழ் நாளில் மறக்க முடியாத நாள், 2.30 மணியளவில் எல்லோரும் சாப்பிடப்போக தயாராகிவிட்டார்கள், ஜெயமோகனுடன் ஒரு Lunch , கடைசியில் ஜெயமோகனுடன் எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம், பிரியும் வேளையிலும் எங்களிடவும் விடைபெற்றார் அந்த கலைஞன். ஒரு நல்ல மனிதனை பார்த்த சந்தோஷத்தில் நான், எளிமையான தோற்றம், இடைவிடாத பேச்சு, மலயாளம் கலந்த தமிழ் மொழி, இவையெல்லாம் தான் அவரிடம் பிடித்திருந்த்து............
அவரைப் பார்த்த பிறகு தான் அவரின் படைப்புகளை படிக்க ஆசை உண்டாயிற்று.....மிக விரைவில் ஆரம்பிப்பேன்..........
த்யாகு சார் உங்களுக்கு ஓராயிரம் நன்றிகள் என்னையும் உங்கள் கூட்டத்திற்க்குள் சேர்த்தர்க்கு..
நன்றி.............
     நன்றி..........
           நன்றி............