Tuesday, September 25, 2012

உலகின் மிகச் சிறந்த ஆங்கில சுயமுன்னேற்ற புத்தகங்கள் இப்போது தமிழில்



அலுவலகத்தில் உடல்மொழி
                         
                                ஆலன் & பார்பரா பீஸ்



Body Language in the Work Place 

                      Allan & Barbara Pease

சிந்தனையை  மாற்றுங்கள்....
வாழ்க்கையை மாற்றுங்கள்....
                                 
                                  பிரையன்  டிரேசி


Change Your Thinking 
Change Your Life
             
                               Brain Tracy

துணிந்தவனுக்கே  வெற்றி......

                           ஜாக் கேன்ஃபீல்டு
                           மார்க் விக்டர்  ஹான்சன்


Dare To Win.....
   
    Jack Canfield  & Mark Victor Hansen

வாழ்க்கை  ஒரு  பரிசு

                            கில்  எட்வர்ட்ஸ்



Life  is  A  Gift
          
                           Gill  Edwards

ஆண்களின் பூர்வீகம்  செவ்வாய்.,
பெண்களின் பூர்வீகம்  சுக்கிரன்.....

                                 ஜான்  கிரே


Men are From Mars., Women are From Venus......

                                John Gray

படைக்கலாம் உங்களது  உலகத்தை
            
                                        சஜீவ்  நாயர்


Bringing  Positive  Tranformation

                                        Sajeev  Nair


பிஸினஸ்   ஸ்கூல்
   
                              ராபர்ட்  கியோஸாகி


The  Business School  

                              Robert  T .Kiyosaki 
நேர்மறைச்  சிந்தனையின்  
வியத்தகு  சக்தி.........

                            நார்மன்  வின்சென்ட் பீல்



The  Power  of   Positive  Thinhing 

                           Norman Vincent  Peale   
ஆழ்மனத்தின்   அற்புத  சக்தி

                          டாக்டர் ஜோஸப் மர்ஃபி



The  Power  of  Subconscious  Mind

                        Joseph  Murphy.........
ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் 
செல்வந்தராவது எப்படி....?

                                        டாக்டர் ஜோஸப் மர்ஃபி



Your  Infinite  Power To Be  Rich

                               Joseph  Murphy 






ஒரு மாபெரும் இரகசியம்  உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது...........

    

இரகசியம்               -        ரோண்டா பைர்ன் 
The  Secret           -        Rhonda  Byrne   

Thursday, September 13, 2012

ஏற்புரை ஏற்று கலக்கி விட்டார் கண்மணி குணசேகரன்........!



கடந்த ஞாயிறு 09-09-2012 அன்று நடந்த எழுத்தாளர் கணமணி குணசேகரனுடைய

படைப்புக்களம் பற்றிய சிந்தனை முற்றம். ஒரு பதிவு.....






” இது நடு விட்டத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி.,

மூளையை கசக்கிப் பிழிந்து கண் காது வைத்துத் தேடிப் பின்னப்பட்ட கதை அல்ல.,

கண்முன்னே விரிந்த., கண்ணீரும் கம்பலையுமாய் உப்பு பூத்துக்கிடந்த.,

அவசியம் பதிவு செய்ய நேர்ந்த வாழ்க்கை இது”



கண்மணி குணசேகரன்




எழுத்தில் தன்னை நன்கு பதியத் தெரிந்த பல எழுத்தாளர்களுக்கு., தான் பார்த்ததை., ரசித்ததை., உணர்ந்ததை..

சுவைபட....அதுவும் ரசனையின்பால் அரங்கத்தை தேடிவந்து அமர்ந்திருக்கும் வாசகர்களுக்குப் பிடித்த

மொழியில் புரியும்படி சொல்லிச் சிரிக்கவைத்து.,ரசிக்க வைத்து.., எப்போதாவது சிந்திக்கவும் வைத்து....கை

தட்டல் வாங்குவது ஒரு மிகச் சிறந்த கலை..... என்பது பிடிபடவே இல்லை



அதைத் தன்னிடமிருந்து., மிக இயல்பாய்..... ”கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை.... சூரியன் உதிக்கும்

திசையைத்தான் கிழக்கு என்கிறோம்.”...என்பது போன்ற....நகாசு வேலைகள் எதுவும் செய்யாமல் .,

தானறிந்த தன் வட்டார மொழியிலே திக்கித்தினராமல் பேசி அரங்கத்தை அதிரச் செய்துவிட்டார்

கண்மணி குணசேகரன்.....



புழுதி பறக்கும் செம்மண் பூமியின் அடர்ந்த முந்திரிக்காடுகள்..முள்ளாய்க் குத்தும் புதர்களின் நடுவே

ஒத்தையடிப் பாதையிலே வாழ்வின் சுவடுகளைத் தேடுபவர்களும் ., தொலைத்தவர்களும் நடமாடிக்

கொண்டிருக்கும் பூமியே கண்மணியின் கதைக்களம்.



வெள்ளந்தியாய்....சிறு தெய்வங்கள் . வெம்மைப்பூமியின் வெப்பத்துக்கு இடையே கள்ளிச் செடியாயினும்.,...

பூவாய் மலறும் உறவுப் பாலங்கள்.....



“அஞ்சலை ஆகட்டும்., நெடுஞ்சாலைப் பயணமாகட்டும்...கோரையாய்ப் போன வாழ்நாள் உழைப்பாகட்டும்.,

தன் கதாப்பாத்திரங்களின் வாயிலாக ., அவர் சார்ந்த விருத்தாசலம்., பண்ணுருட்டி., கடலூர் போன்ற நடு நாட்டின்

இயல்புத்தண்மையை... மிக யதார்த்தமாக பதிவு செய்ததை தன் ஏற்புரையில் வெளிப்படுத்தினார் ......கண்மணிகுணசேகரன்.



எழுத்து என்பது ...பெரிய விசயமே அல்ல... நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் வழியே நம்முள்

பதியும் உணர்வுகளைப் பதிய வைப்பதுதான்....... .என்று எந்த வித சித்தாந்தப் பூச்சுக்கள் அற்ற

யதார்த்த வாதத்துடன் தம் ஏற்புறையை நிறைவான ....... சந்தோசங்களுடன் முடித்துக்கொண்டார்.



கண்மணி குணசேகரனின் படைப்புக் களம் பற்றிய இலக்கியக் கூட்டத்தில் இலக்கியத்தையும்..,இலக்கியவாதி

களையும் உரிய நேரத்தில் கண்டுகொண்டு கெளரவிக்கப்படாத சமூகத்தின்பால் தமக்கு இருக்கும் தார்மீகக்

கோபத்தை வெளிப்படுத்திய திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் கண்மணி குணசேகரணின் படைப்பு இலக்கியத்தைப்

பற்றி கூறும் போது...”தமிழ் இலக்கியம் புதுமைப் பித்தனுடன் நின்றுவிடவில்லை........புதுமைப்பித்தனையும் தாண்டி

கண்மணிகுணசேகரனின் எழுத்துக்கள் அடுத்த தளத்துக்கு வந்து விட்டது என்று ..” சிறப்பித்துக் கூறினார்



”உலகமயம் ஆக்குதலின் விபரீதங்களால் ., நகரமயமாக்கப் பட்ட கிராமங்களில் சின்னச் சின்ன அழகான நிகழ்வுகள்

சூழ்ந்த இயல்பு வாழ்க்கை தொலைந்து போகையில்., நாம் எதை எல்லாம் இழந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக

பதிய வைப்பதே எழுத்தாளரின் ஆகச் சிறந்த உத்தி.” அதை கண்மணி குணசேகரன் மிகச் சரியாக

பதியவைத்திருக்கிறார் என்று “மணல் கடிகை” எம். கோபாலகிருஷ்ணன் கூறினார்.....



கண்மணி குணசேகரனின் எழுத்துக்களில் தான் சுவைத்து ரசித்த பகுதிகளை சொல்லி பாராட்டினார் ”கூந்தப்பனை”

சு.வேணுகோபால் அவர்கள் ...


எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு சிறப்புச் செய்யும் விதமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்.,

பணமுடிப்பாக கொடுத்து கண்மணி குணசேகரனை நெகிழ செய்தார்கள்.... ”சந்தோஷம்”





மூன்று மணிநேர இலக்கிய கூட்டத்தில் முதல் இரண்டு மணிநேரம் வந்திருக்கும் வாசகப் பெருமக்களின்

பொருமையை மிக அதிகமாக சோதித்து விடுகிறார்கள் கூட்ட அமைப்பாளர்கள்..

அவர்களுக்கு அவர்களது Protocol ....




எழுபதுகளில் பரவலாக தீவிர இலக்கியத்தை சுவைக்க துவங்கிய இளைஞர்கள்..... இன்று தலை நரைத்து

பெறும் தொப்பையுடனும் நீரிழிவு நோயுடனும் ..... இது போல் எத்தனை கூட்டங்களைக் கண்டிருக்கிறேன்..... என்று

மிக பொருமையாக ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தார்கள்....


அவர்களையும் கிராமம் தான் என் கதை உலகம்...... இந்த மண்ணுக்கும் ., மொழிக்கும்., உண்மையான

படைப்பாளியாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்று தனக்கே உரிய எளிமையான யதார்த்தமான

கிராமிய இயல்பு மொழியில்

பிரவாகமாகப் பேசி......


புன்னகைக்க செய்து.....

வாய்விட்டு சிரிக்கச் செய்து...

மகிழச் செய்து.....

கைதட்டல் வாங்கினார் கண்மணி குணசேகரன்..........    




கண்மணி குணசேகரின் படைப்புகள்
கோரை
அஞ்சலை
நெடுஞ்சாலை












சிறுகதைகள்
 உயிர்த்தண்ணீர்
ஆதண்ட கோயில் குதிரை
வெள்ளெருக்கு
பூரணி பொற்கலை












கவிதைகள் 
தலைமுறை கோபம்
பாட்டியின் பாடல்
காலடியில் குவியும் நிழல் வேளை


முந்திரித்  தோப்புக்கள்  அடர்ந்த  செம்மண்  பூமியான விருதாச்சலம்., கடலூர்., பன்னுருட்டி.,   பகுதியின்   பரவலான

சொல்   அகராதியை.,  
நடுநாட்டுச் சொல் அகராதியாக  பதிப்பித்தார்  கண்மணி  குணசேகரன்
........


Friday, August 17, 2012

பூமணி - அஞ்ஞாடி

 







 புதுவரவாக பூமணியின் “அஞ்ஞாடி” நாவல்,  ஒன்றரை  நூற்றாண்டுகாலம், இருபெரும்  சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகத்தின்  ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை, மனிதர்களை பிரிக்கும் வன்முறையிலும் ஒளிரும் நட்பு, மண்ணையும் மனிதர்களையும் பிரிக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்... பூமணியின் அற்புத நடையில் .. ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்.. தமிழின் முக்கியமான  மற்றுமொரு நாவல்.....

 இன்பமும்  துக்கமும்  நிறைவும்  ஏக்கமுமான   நினைவுகள்..........   பல  தலைமுறை  வாழ்க்கையை  செறிந்த  மொழியில்  அடித்த  தலைமுறைகளுக்கு  அளிக்கும்  கலாச்சார  மூலதனமாக  தன்னை  வெளிப்படுத்திக்  கொள்கிறது  அஞ்ஞாடி..............

தமிழில்  நல்ல  நாவல்கள்  இருக்கின்றன  ஆனால்   மிகச்  சிறந்த  நாவல்  இல்லை  இன்னும்  எழுதப்படாத  மிகச்  சிறந்த  நாவலுக்கு...........
  மிக  அருகில்..........  வந்திருக்கிறது   பூமணியின்  ”அஞ்ஞாடி”
                                                                                                    
                                                                                                           என்.சிவராமன்




    வாசித்துப்பாருங்களேன்...............!

Saturday, June 9, 2012

தமிழ் மகனின்....ஆண் பால்...பெண் பால்......







எழுபதுகளில் உச்சத்திலும்.., அதைத் தொடர்ந்து தன் மரணம் வரையில் மட்டும் அல்லாமல்., மரணத்திற்குப்பின் இன்று வரையிலும் கூட.,  குறிப்பிடத்தக்க சதவீத மக்கள் மனதினில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மிகப் பிரபல்யத்தின் தாக்கத்தின் பதிவு இது.
தன்னுள்ளும்., தனைச் சுற்றியும் பிறரை ஈர்க்கும் திறனுடய தனி மனித பண்பை அதீதமாக வளர்த்துக் கொள்வதில் உன்னதமான வெற்றி அடைந்தவர்., திரைஉலகிலும் அரசியலிலும் தன் வெற்றிச் சரிதத்தை நிலை நாட்டியதுபோலவே எழுபதுகளின் உச்சத்தில் இருந்து மக்கள் மனதில் நிலை நாட்டினார்........... அதிலும் குறிப்பாக பெண்கள் மனதில்.........!
ஊட்டி வளர்க்கபட்டதினாலோ., ஊரிப்போனதினாலோ., தன் மன ஆழத்தின் படிமங்களில் பதியப் பட்ட மிகப் பிரபல்யதின் கரிஷ்மாகதைநாயகியின் வாழ்வியல் பிரச்சனையாக மாறியதை ப்ரியா.,அருண் இருவர் பார்வையிலும் பதியவைத்திருக்கிறார் தமிழ் மகன்.
நாயகியின் உடலியல் நிறமிக்கோளாரான வெண்குஷ்டம்., அவரது மனதில் ஏற்படுத்தும் தாழ்வு மனப்பான்மை மனச்சிதைவுக்கு கொண்டு சென்று உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஒரே பிரச்சனையை பெண்ணின் பார்வையிலும் ஆணின்பார்வையிலும் வடிவமைத்து தான் இங்கே இல்லை என்பதை இருப்பதாக உறுதிப்படுத்துகிறார் தமிழ் மகன்.
1972ல் கண்ணாதசன் இதழில் வெளிவந்த ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் சேரிவாழ்  கதாபாத்திரங்களான.,சித்தாள் கம்சலைக்கும்.,ரிக்‌ஷாஓட்டும் செல்லமுத்துவின் குடும்பவாழ்வில் இதேபிரபல்யத்தின் தாக்கம், நேரடியாகத் தாக்கி, பிறழ் காமத்தில் கம்சலையின் வாழ்வினைத் தொலைத்தது.

இதே பிரபல்யத்தின் தாக்கமாக சூத்திரதாரி என்கின்ற எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை உமாவும், எம்.ஜி.ஆர் எனும் கரிஷ்மாவின் மீதான தன் அதீத ரசனையை வெளிப்படுத்துகிறார். ஆனால் தன் வாழ்வினைத் தொலைத்துவிடாமல் தன் அளவில் சுதாரித்துக் கொள்கிறார். ஆனால் வாழ்வின் ஓட்டத்தில் தன்னையும் தொலைத்து.., அதற்கு காரனமானவனோடு சேர்ந்து கரிக்கட்டையாகிப் போகிறார் மணல் கடிகை உமா.

தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் கதாப்பாத்திரமான ப்ரியாவின் வாழ்விலோ...மனப் பிறழ் காமம் ., உளவியல் ரீதியாக ப்ரியாவின் வாழ்வினைத்தொலைத்தது
ப்ரியா.,கம்சலை இருவர் வாழ்விலும்.,அனர்த்தங்கள் மலர்ந்து ., தாமே தம்மிடமிருந்து தொலைந்துபோகக் காரணமானது ...,எம்.ஜி.ஆர்.......எனும் மிகப் பிரபல்யத்தின்....கரிஷ்மா
இரண்டிலுமே.,பெண்மை பரிதாபமாக அடிபட.,ஆண்மை அரவணைத்துக் கொள்கிறது..........

Saturday, March 17, 2012

அறம் - ஜெயமோகன்





இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன் .

 அறம் என்றால் என்ன வென்று பீஷ்மருக்கே தெரியவில்லை.... சாமான்யமான என்னை கேட்கரீங்களே......!

அறம் எனப்து தர்மம் எனில்,
 சாதாரண தர்மம் விசேஷ தர்மம் ஆபத்து தர்மம் 
இதில் ஜெயமோகன் கூறும்
மானுட வெற்றியைக் கொண்டாடும் 
அறம் தான் என்ன..........!

Wednesday, March 7, 2012

சுஜாதா - எப்போதும் பெண்





பெண் என்ற அதிசயத்தின் பால்.....
எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும்....,
ஏன், பக்தியும் தான் என்னை
இதை எழுத செலுத்தும் சக்திகள்....
என “சுஜாதாவின் கூட்டில் மலர்ந்த
எப்போதும் பெண் 1984 படித்தேன்
அட்ரினலின் இயக்கத்தில் அடி வயிறு கலங்கியது..
ஒவ்வொருவரும் உணரவேண்டிய புத்தகம்
ஏறகுறைய 28 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த
மருத்துவ வளர்ச்சியின் சூழலில்
இழந்து போனது எத்தனை எத்தனை உயிர்கள்....

எல்லாவற்றுக்கும் நடுவில் பெண்மையின்
பற்பல உணர்வுகளைத் தொடுத்த....
அந்த அடிநாதம்தான் எது...?

உணர்பவர்களுக்கு மட்டுமே புரியும்...

Friday, January 13, 2012

எக்ஸைல் - சாரு நிவேதிதா



காலம், வெளி இரண்டிலும் முடிவற்ற சாத்தியத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்நாவல்.. இந்நாவலை இப்படித்தான் என்று வகைப்படுத்துவதைவிட, இந்நாவலே   ஒரு  புதிய வகைமாதிரியானது  என்பதைத்தான் எக்ஸைல்  முன்வைக்கிறது.

”கொஞ்சம் புன்னகைக்கலாம். கொஞ்சம் திட்டலாம். கொஞ்சம் ரசிக்கலாம். கொஞ்சம் குமுறலாம். கொஞ்சம் கண்ணீர் உகுக்கலாம். கொஞ்சம் பாராட்டலாம். கொஞ்சம் எரிச்சல்  அடையலாம். கொஞ்சம் அஞ்சலாம். கொஞ்சம் வெட்கப்படலாம். கொஞ்சம் கொஞ்சலாம். மொத்தத்தில் கொக்கரக்கோ! ........அதாவது தூங்குபவர்களை  ‘எழுப்பி’  விட்டிருக்கிறார்...”
.......சாரு நிவேதிதா

...........................................................நன்றி.அரசு கேள்வி பதில் .குமுதம்28.12.2011.







Saturday, January 7, 2012

அவ்வுலகம் - வெ.இறையன்பு



”அவ்வுலகம்” என்பது அந்த நூலின் பெயர். அது கதையா?ஆமாம். ஆன்மிகப் படைப்பா?ஆமாம். நாத்திகப் படைப்பா?ஆமாம். அமானுஷ்யக் கதையா?ஆமாம். நீதிக் கதையா?ஆமாம். சுயமுன்னேற்றப் புத்தகமா? ஆமாம். குடும்பக் கதையா? ஆமாம்யா ஆமாம். இப்படி ஒரு கட்டத்துக்குள் அடைக்க முடியாத புதுமைப் படைப்பு அது.
 ஒரு மனிதன் இறந்த பிறகு மறு உலகில்
அவனுக்கு என்ன நடக்கிறது? யாரையெல்லாம் அவ்வுலகில் சந்திக்கிறான்? என்னவெல்லாம் நினைக்கிறான்? என்பதை என்னவோ
மறு உலகத்திற்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பி வந்த ஒருவரின் அனுபவம் போல் எழுதப்பட்டிருக்கிறது. கதை, மனைவி,மகன், அதிகாரி, நண்பன், எதிரி, காதலி என்று இறந்துபட்ட ஒவ்வொருவரையும் அங்கே சந்தித்து உரையாடும் பாணி தமிழுக்கு ரொம்பவே புதுசு.

பூவுலகில் மனைவியோடு அன்பாக வாழத் தெரியாத கணவன், மறு உலகத்தில் அவளைச் சந்திக்கும் போது பாசம் பிரீடுகிறது.

”உன்னோட வாழணும்னு எனக்கு ஆசையா இருக்கு கங்கா” 

“வாய்ப்புக் கிடைச்சப்ப நழுவ விட்டுட்டீங்க. வாழ்வில் இழந்த ஒரு நொடியைக் கூட திரும்பப் பெற முடியாதுன்னு நாம உணராமல்தான் வாழ்க்கையைக் கழிச்சுடறோம் இல்லையா?”
என்று அவர்கள் பேசிகொள்ளும்போது கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

“சுவாரசியமில்லாத மனிதர்களின் வெற்றி, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஒரு போதும் தருவதில்லை”. “முட்டாள்தனத்தைக் கொண்டாடுகிற உலகத்தில் புத்தர் புறந்தள்ளப்படுவது இயல்புதான்”. ’நம்பிக்கைகள் எல்லாமே ஒரு வகையில் மூட நம்பிக்கைகளே’ என்று அங்கங்கே முத்துக்கள் தெறிக்கின்றன.

மறு உலகில் நடக்கும் இந்த நாவலைப் படித்தால் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற பார்வை உங்களுக்குப் புலப்படும்.
பலப்படும். அதுதான் இந்த நாவலின் வெற்றி.
எழுதியவர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.  



நன்றி.............. அரசு கேள்வி பதில்..... குமுதம்..... 14-12-2011