Friday, January 13, 2012

எக்ஸைல் - சாரு நிவேதிதா



காலம், வெளி இரண்டிலும் முடிவற்ற சாத்தியத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்நாவல்.. இந்நாவலை இப்படித்தான் என்று வகைப்படுத்துவதைவிட, இந்நாவலே   ஒரு  புதிய வகைமாதிரியானது  என்பதைத்தான் எக்ஸைல்  முன்வைக்கிறது.

”கொஞ்சம் புன்னகைக்கலாம். கொஞ்சம் திட்டலாம். கொஞ்சம் ரசிக்கலாம். கொஞ்சம் குமுறலாம். கொஞ்சம் கண்ணீர் உகுக்கலாம். கொஞ்சம் பாராட்டலாம். கொஞ்சம் எரிச்சல்  அடையலாம். கொஞ்சம் அஞ்சலாம். கொஞ்சம் வெட்கப்படலாம். கொஞ்சம் கொஞ்சலாம். மொத்தத்தில் கொக்கரக்கோ! ........அதாவது தூங்குபவர்களை  ‘எழுப்பி’  விட்டிருக்கிறார்...”
.......சாரு நிவேதிதா

...........................................................நன்றி.அரசு கேள்வி பதில் .குமுதம்28.12.2011.







Saturday, January 7, 2012

அவ்வுலகம் - வெ.இறையன்பு



”அவ்வுலகம்” என்பது அந்த நூலின் பெயர். அது கதையா?ஆமாம். ஆன்மிகப் படைப்பா?ஆமாம். நாத்திகப் படைப்பா?ஆமாம். அமானுஷ்யக் கதையா?ஆமாம். நீதிக் கதையா?ஆமாம். சுயமுன்னேற்றப் புத்தகமா? ஆமாம். குடும்பக் கதையா? ஆமாம்யா ஆமாம். இப்படி ஒரு கட்டத்துக்குள் அடைக்க முடியாத புதுமைப் படைப்பு அது.
 ஒரு மனிதன் இறந்த பிறகு மறு உலகில்
அவனுக்கு என்ன நடக்கிறது? யாரையெல்லாம் அவ்வுலகில் சந்திக்கிறான்? என்னவெல்லாம் நினைக்கிறான்? என்பதை என்னவோ
மறு உலகத்திற்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பி வந்த ஒருவரின் அனுபவம் போல் எழுதப்பட்டிருக்கிறது. கதை, மனைவி,மகன், அதிகாரி, நண்பன், எதிரி, காதலி என்று இறந்துபட்ட ஒவ்வொருவரையும் அங்கே சந்தித்து உரையாடும் பாணி தமிழுக்கு ரொம்பவே புதுசு.

பூவுலகில் மனைவியோடு அன்பாக வாழத் தெரியாத கணவன், மறு உலகத்தில் அவளைச் சந்திக்கும் போது பாசம் பிரீடுகிறது.

”உன்னோட வாழணும்னு எனக்கு ஆசையா இருக்கு கங்கா” 

“வாய்ப்புக் கிடைச்சப்ப நழுவ விட்டுட்டீங்க. வாழ்வில் இழந்த ஒரு நொடியைக் கூட திரும்பப் பெற முடியாதுன்னு நாம உணராமல்தான் வாழ்க்கையைக் கழிச்சுடறோம் இல்லையா?”
என்று அவர்கள் பேசிகொள்ளும்போது கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

“சுவாரசியமில்லாத மனிதர்களின் வெற்றி, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஒரு போதும் தருவதில்லை”. “முட்டாள்தனத்தைக் கொண்டாடுகிற உலகத்தில் புத்தர் புறந்தள்ளப்படுவது இயல்புதான்”. ’நம்பிக்கைகள் எல்லாமே ஒரு வகையில் மூட நம்பிக்கைகளே’ என்று அங்கங்கே முத்துக்கள் தெறிக்கின்றன.

மறு உலகில் நடக்கும் இந்த நாவலைப் படித்தால் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற பார்வை உங்களுக்குப் புலப்படும்.
பலப்படும். அதுதான் இந்த நாவலின் வெற்றி.
எழுதியவர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.  



நன்றி.............. அரசு கேள்வி பதில்..... குமுதம்..... 14-12-2011