Tuesday, September 25, 2012

உலகின் மிகச் சிறந்த ஆங்கில சுயமுன்னேற்ற புத்தகங்கள் இப்போது தமிழில்



அலுவலகத்தில் உடல்மொழி
                         
                                ஆலன் & பார்பரா பீஸ்



Body Language in the Work Place 

                      Allan & Barbara Pease

சிந்தனையை  மாற்றுங்கள்....
வாழ்க்கையை மாற்றுங்கள்....
                                 
                                  பிரையன்  டிரேசி


Change Your Thinking 
Change Your Life
             
                               Brain Tracy

துணிந்தவனுக்கே  வெற்றி......

                           ஜாக் கேன்ஃபீல்டு
                           மார்க் விக்டர்  ஹான்சன்


Dare To Win.....
   
    Jack Canfield  & Mark Victor Hansen

வாழ்க்கை  ஒரு  பரிசு

                            கில்  எட்வர்ட்ஸ்



Life  is  A  Gift
          
                           Gill  Edwards

ஆண்களின் பூர்வீகம்  செவ்வாய்.,
பெண்களின் பூர்வீகம்  சுக்கிரன்.....

                                 ஜான்  கிரே


Men are From Mars., Women are From Venus......

                                John Gray

படைக்கலாம் உங்களது  உலகத்தை
            
                                        சஜீவ்  நாயர்


Bringing  Positive  Tranformation

                                        Sajeev  Nair


பிஸினஸ்   ஸ்கூல்
   
                              ராபர்ட்  கியோஸாகி


The  Business School  

                              Robert  T .Kiyosaki 
நேர்மறைச்  சிந்தனையின்  
வியத்தகு  சக்தி.........

                            நார்மன்  வின்சென்ட் பீல்



The  Power  of   Positive  Thinhing 

                           Norman Vincent  Peale   
ஆழ்மனத்தின்   அற்புத  சக்தி

                          டாக்டர் ஜோஸப் மர்ஃபி



The  Power  of  Subconscious  Mind

                        Joseph  Murphy.........
ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் 
செல்வந்தராவது எப்படி....?

                                        டாக்டர் ஜோஸப் மர்ஃபி



Your  Infinite  Power To Be  Rich

                               Joseph  Murphy 






ஒரு மாபெரும் இரகசியம்  உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது...........

    

இரகசியம்               -        ரோண்டா பைர்ன் 
The  Secret           -        Rhonda  Byrne   

Thursday, September 13, 2012

ஏற்புரை ஏற்று கலக்கி விட்டார் கண்மணி குணசேகரன்........!



கடந்த ஞாயிறு 09-09-2012 அன்று நடந்த எழுத்தாளர் கணமணி குணசேகரனுடைய

படைப்புக்களம் பற்றிய சிந்தனை முற்றம். ஒரு பதிவு.....






” இது நடு விட்டத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி.,

மூளையை கசக்கிப் பிழிந்து கண் காது வைத்துத் தேடிப் பின்னப்பட்ட கதை அல்ல.,

கண்முன்னே விரிந்த., கண்ணீரும் கம்பலையுமாய் உப்பு பூத்துக்கிடந்த.,

அவசியம் பதிவு செய்ய நேர்ந்த வாழ்க்கை இது”



கண்மணி குணசேகரன்




எழுத்தில் தன்னை நன்கு பதியத் தெரிந்த பல எழுத்தாளர்களுக்கு., தான் பார்த்ததை., ரசித்ததை., உணர்ந்ததை..

சுவைபட....அதுவும் ரசனையின்பால் அரங்கத்தை தேடிவந்து அமர்ந்திருக்கும் வாசகர்களுக்குப் பிடித்த

மொழியில் புரியும்படி சொல்லிச் சிரிக்கவைத்து.,ரசிக்க வைத்து.., எப்போதாவது சிந்திக்கவும் வைத்து....கை

தட்டல் வாங்குவது ஒரு மிகச் சிறந்த கலை..... என்பது பிடிபடவே இல்லை



அதைத் தன்னிடமிருந்து., மிக இயல்பாய்..... ”கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை.... சூரியன் உதிக்கும்

திசையைத்தான் கிழக்கு என்கிறோம்.”...என்பது போன்ற....நகாசு வேலைகள் எதுவும் செய்யாமல் .,

தானறிந்த தன் வட்டார மொழியிலே திக்கித்தினராமல் பேசி அரங்கத்தை அதிரச் செய்துவிட்டார்

கண்மணி குணசேகரன்.....



புழுதி பறக்கும் செம்மண் பூமியின் அடர்ந்த முந்திரிக்காடுகள்..முள்ளாய்க் குத்தும் புதர்களின் நடுவே

ஒத்தையடிப் பாதையிலே வாழ்வின் சுவடுகளைத் தேடுபவர்களும் ., தொலைத்தவர்களும் நடமாடிக்

கொண்டிருக்கும் பூமியே கண்மணியின் கதைக்களம்.



வெள்ளந்தியாய்....சிறு தெய்வங்கள் . வெம்மைப்பூமியின் வெப்பத்துக்கு இடையே கள்ளிச் செடியாயினும்.,...

பூவாய் மலறும் உறவுப் பாலங்கள்.....



“அஞ்சலை ஆகட்டும்., நெடுஞ்சாலைப் பயணமாகட்டும்...கோரையாய்ப் போன வாழ்நாள் உழைப்பாகட்டும்.,

தன் கதாப்பாத்திரங்களின் வாயிலாக ., அவர் சார்ந்த விருத்தாசலம்., பண்ணுருட்டி., கடலூர் போன்ற நடு நாட்டின்

இயல்புத்தண்மையை... மிக யதார்த்தமாக பதிவு செய்ததை தன் ஏற்புரையில் வெளிப்படுத்தினார் ......கண்மணிகுணசேகரன்.



எழுத்து என்பது ...பெரிய விசயமே அல்ல... நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் வழியே நம்முள்

பதியும் உணர்வுகளைப் பதிய வைப்பதுதான்....... .என்று எந்த வித சித்தாந்தப் பூச்சுக்கள் அற்ற

யதார்த்த வாதத்துடன் தம் ஏற்புறையை நிறைவான ....... சந்தோசங்களுடன் முடித்துக்கொண்டார்.



கண்மணி குணசேகரனின் படைப்புக் களம் பற்றிய இலக்கியக் கூட்டத்தில் இலக்கியத்தையும்..,இலக்கியவாதி

களையும் உரிய நேரத்தில் கண்டுகொண்டு கெளரவிக்கப்படாத சமூகத்தின்பால் தமக்கு இருக்கும் தார்மீகக்

கோபத்தை வெளிப்படுத்திய திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் கண்மணி குணசேகரணின் படைப்பு இலக்கியத்தைப்

பற்றி கூறும் போது...”தமிழ் இலக்கியம் புதுமைப் பித்தனுடன் நின்றுவிடவில்லை........புதுமைப்பித்தனையும் தாண்டி

கண்மணிகுணசேகரனின் எழுத்துக்கள் அடுத்த தளத்துக்கு வந்து விட்டது என்று ..” சிறப்பித்துக் கூறினார்



”உலகமயம் ஆக்குதலின் விபரீதங்களால் ., நகரமயமாக்கப் பட்ட கிராமங்களில் சின்னச் சின்ன அழகான நிகழ்வுகள்

சூழ்ந்த இயல்பு வாழ்க்கை தொலைந்து போகையில்., நாம் எதை எல்லாம் இழந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக

பதிய வைப்பதே எழுத்தாளரின் ஆகச் சிறந்த உத்தி.” அதை கண்மணி குணசேகரன் மிகச் சரியாக

பதியவைத்திருக்கிறார் என்று “மணல் கடிகை” எம். கோபாலகிருஷ்ணன் கூறினார்.....



கண்மணி குணசேகரனின் எழுத்துக்களில் தான் சுவைத்து ரசித்த பகுதிகளை சொல்லி பாராட்டினார் ”கூந்தப்பனை”

சு.வேணுகோபால் அவர்கள் ...


எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு சிறப்புச் செய்யும் விதமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்.,

பணமுடிப்பாக கொடுத்து கண்மணி குணசேகரனை நெகிழ செய்தார்கள்.... ”சந்தோஷம்”





மூன்று மணிநேர இலக்கிய கூட்டத்தில் முதல் இரண்டு மணிநேரம் வந்திருக்கும் வாசகப் பெருமக்களின்

பொருமையை மிக அதிகமாக சோதித்து விடுகிறார்கள் கூட்ட அமைப்பாளர்கள்..

அவர்களுக்கு அவர்களது Protocol ....




எழுபதுகளில் பரவலாக தீவிர இலக்கியத்தை சுவைக்க துவங்கிய இளைஞர்கள்..... இன்று தலை நரைத்து

பெறும் தொப்பையுடனும் நீரிழிவு நோயுடனும் ..... இது போல் எத்தனை கூட்டங்களைக் கண்டிருக்கிறேன்..... என்று

மிக பொருமையாக ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தார்கள்....


அவர்களையும் கிராமம் தான் என் கதை உலகம்...... இந்த மண்ணுக்கும் ., மொழிக்கும்., உண்மையான

படைப்பாளியாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்று தனக்கே உரிய எளிமையான யதார்த்தமான

கிராமிய இயல்பு மொழியில்

பிரவாகமாகப் பேசி......


புன்னகைக்க செய்து.....

வாய்விட்டு சிரிக்கச் செய்து...

மகிழச் செய்து.....

கைதட்டல் வாங்கினார் கண்மணி குணசேகரன்..........    




கண்மணி குணசேகரின் படைப்புகள்
கோரை
அஞ்சலை
நெடுஞ்சாலை












சிறுகதைகள்
 உயிர்த்தண்ணீர்
ஆதண்ட கோயில் குதிரை
வெள்ளெருக்கு
பூரணி பொற்கலை












கவிதைகள் 
தலைமுறை கோபம்
பாட்டியின் பாடல்
காலடியில் குவியும் நிழல் வேளை


முந்திரித்  தோப்புக்கள்  அடர்ந்த  செம்மண்  பூமியான விருதாச்சலம்., கடலூர்., பன்னுருட்டி.,   பகுதியின்   பரவலான

சொல்   அகராதியை.,  
நடுநாட்டுச் சொல் அகராதியாக  பதிப்பித்தார்  கண்மணி  குணசேகரன்
........