Wednesday, May 25, 2011

யுவன் சந்திரசேகர் - கரட்டுப்பட்டிக்காரர்

வழக்கமான கதை சொல்லும் பாணிகளை நிராகரித்துவிட்டு வாழ்வின் அழகையும் அவலங்களையும் , ஜீவத்துடிதுடிப்புடன் பதியவைப்பதில் கரை கண்டவர்.

கதையின் ஆதார அழகியலையும் சுவாரசியத்தையும் விரித்தபடியே அதன் வழக்கமான வழிமுறைகளை கலைத்து மாற்றி அமைக்கும் வித்தை தெரிந்தவர்..........


யுவனின் கவிதைகள்.....

                “74 கவிதைகள்”.......
                ”புகைச்சுவருக்கு அப்பால்”......
                ”கைமறதியாய் வைத்த நாள்”.....





ஒளிவிலகல் - சிறுகதை தொகுப்பு
உற்ற தோழி............ இந்த கதைகளின் முதல் வாசகி.........,
தன் மூத்த சகோதரி..........
திருமதி கல்யாணிமோகனுக்கு
சமர்ப்பிக்கப்பட்ட 12 சிறுகதைகள் கொண்ட
முதல் தொகுதி..........


ஏற்கனவே - சிறுகதை தொகுப்பு
சம்பிரதாயமான, வெளிப்படையான..........
 இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும், பிரக்ஞையாலும்............ தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை........
 யுவன் சந்திரசேகரின்.............
 இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது...............


யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான...........
37 சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது........

...............கனவுன்னா, தூங்கும்போது வரும்.
பகல் கனவு முழிச்சிண்டிருக்கும்போது வரும்.................


குள்ளச்சித்தன் சரித்திரம் -  முதல் நாவல்


குள்ளச்சித்தன் என்று பெயருடைய ஒரு சித்தபுருஷரை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். சிலருக்கு அவர் வாழ்க்கையின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். சிலருக்கு அவர் மெய்ஞானம் அளிக்கிறார். அவர் ஒரே சமயம் பல இடங்களிலும் காட்சியளிக்கிறார்

பகடையாட்டம்
...........சதுரங்க காய்களுக்குச் சுய சிந்தனை கூடாது என்பது முதல் பாடம்


சாமானியர்கள் சாவதின் துக்கம், அவரவர் குடுப்பத்தின் சரித்திரதில் மட்டும்தான் பதிவாகிறது

......வாழ்வதைவிட மரணமொன்றும் அத்தனை பயங்கரமானது அல்ல............


கானல்நதி

யுவன் சந்திரசேகரின் கானல் நதி கலையின் எல்லையற்ற பிரகாசத்திற்கும் மனித இருப்பின் முடிவற்ற பெரும் துயருக்கும் இடையே ஒரு அக்னி நதியாக உருக்கொள்கிறது. இந்த நதி காலங்காலமாக மனித அனுபவத்தின் மீள முடியாத கனவொன்றை நம் நெஞ்சில் படரச் செய்கிறது. தனஞ்செயனைத் துரத்தும் விதியின் நிழல் எது? அது திரும்பத் திரும்ப தணியாத விம்முதல் மட்டும்தானா, அல்லது வீழ்ச்சிகளின், மன முறிவுகளின் யாரும் இனம் காண முடியாத விதியின் ரகசியங்களா? வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்த நாவல்
வெளியேற்றம்
"வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றனகுடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றனஅவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன
ஆனால் இதற்கு அப்பால் தன்னிசையாக வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அவருடைய, அவரைச் சுற்றி வலைப்பின்னலாய்ப் படிந்திருக்கும் எண்ணற்ற மனங்களுடைய கதையும்கூட..........

மணற்கேணி
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கேள்வியின் விளைவே யுவன் சந்திரசேகரின் இந்த நூறு குறுங்கதைகள். சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர்கொள்ளக்கூடிய கணங்கள் இக்கதை களின் ஆதாரமாக இருக்கின்றன. மிகக்குறைவான வாக்கியங் களில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள், விவரணைகள், உரையாடல்கள் குறுங்கதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை உணர்த்துகிறது. இவை குறுங் கதைகளாக எழுதப்பட்டபோதும் அவற்றிற்கிடையே ஓடும் பொது நீரோட்டம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது.


கடல் கொண்ட நிலம்
இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள், வாசகனை ஒரு புதிய அனுபவத்தை நோக்கி நகர்த்துபவை. திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுபவை. வாழ்வில் நாம் கண்டறியாத ஒரு புதிய உள் வெளிச்சத்தை நமக்கு அறிமுகப்படுத்துபவை. இக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கும், வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு மனிதர்களின் அனுபவங்கள் ஒரு புதிய பயண அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன. அனுபவித்தறியாத ஒரு நிறைவைத் தருகின்றன


நீர்பறவைகளின் தியானம்
ஒரு கதையில் ஒரே கதையை மட்டும் சொல்வதில் நம்பிக்கையற்றவர் யுவன் சந்திரசேகர். வெவ்வேறு நிலக்காட்சிகளையும் சம்பவங்களையும் மனிதர்களையும் தனது கதைமொழியின் விசித்திரமான அடுக்குகளுக்குள் கலந்துவிடுவதன் மூலம் ஒரு புதிய வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத இழைகளைக் கண்டடைவதன் மூலம் உருவாகும் புனைவுகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள்.