Saturday, June 9, 2012

தமிழ் மகனின்....ஆண் பால்...பெண் பால்......







எழுபதுகளில் உச்சத்திலும்.., அதைத் தொடர்ந்து தன் மரணம் வரையில் மட்டும் அல்லாமல்., மரணத்திற்குப்பின் இன்று வரையிலும் கூட.,  குறிப்பிடத்தக்க சதவீத மக்கள் மனதினில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மிகப் பிரபல்யத்தின் தாக்கத்தின் பதிவு இது.
தன்னுள்ளும்., தனைச் சுற்றியும் பிறரை ஈர்க்கும் திறனுடய தனி மனித பண்பை அதீதமாக வளர்த்துக் கொள்வதில் உன்னதமான வெற்றி அடைந்தவர்., திரைஉலகிலும் அரசியலிலும் தன் வெற்றிச் சரிதத்தை நிலை நாட்டியதுபோலவே எழுபதுகளின் உச்சத்தில் இருந்து மக்கள் மனதில் நிலை நாட்டினார்........... அதிலும் குறிப்பாக பெண்கள் மனதில்.........!
ஊட்டி வளர்க்கபட்டதினாலோ., ஊரிப்போனதினாலோ., தன் மன ஆழத்தின் படிமங்களில் பதியப் பட்ட மிகப் பிரபல்யதின் கரிஷ்மாகதைநாயகியின் வாழ்வியல் பிரச்சனையாக மாறியதை ப்ரியா.,அருண் இருவர் பார்வையிலும் பதியவைத்திருக்கிறார் தமிழ் மகன்.
நாயகியின் உடலியல் நிறமிக்கோளாரான வெண்குஷ்டம்., அவரது மனதில் ஏற்படுத்தும் தாழ்வு மனப்பான்மை மனச்சிதைவுக்கு கொண்டு சென்று உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஒரே பிரச்சனையை பெண்ணின் பார்வையிலும் ஆணின்பார்வையிலும் வடிவமைத்து தான் இங்கே இல்லை என்பதை இருப்பதாக உறுதிப்படுத்துகிறார் தமிழ் மகன்.
1972ல் கண்ணாதசன் இதழில் வெளிவந்த ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் சேரிவாழ்  கதாபாத்திரங்களான.,சித்தாள் கம்சலைக்கும்.,ரிக்‌ஷாஓட்டும் செல்லமுத்துவின் குடும்பவாழ்வில் இதேபிரபல்யத்தின் தாக்கம், நேரடியாகத் தாக்கி, பிறழ் காமத்தில் கம்சலையின் வாழ்வினைத் தொலைத்தது.

இதே பிரபல்யத்தின் தாக்கமாக சூத்திரதாரி என்கின்ற எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை உமாவும், எம்.ஜி.ஆர் எனும் கரிஷ்மாவின் மீதான தன் அதீத ரசனையை வெளிப்படுத்துகிறார். ஆனால் தன் வாழ்வினைத் தொலைத்துவிடாமல் தன் அளவில் சுதாரித்துக் கொள்கிறார். ஆனால் வாழ்வின் ஓட்டத்தில் தன்னையும் தொலைத்து.., அதற்கு காரனமானவனோடு சேர்ந்து கரிக்கட்டையாகிப் போகிறார் மணல் கடிகை உமா.

தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் கதாப்பாத்திரமான ப்ரியாவின் வாழ்விலோ...மனப் பிறழ் காமம் ., உளவியல் ரீதியாக ப்ரியாவின் வாழ்வினைத்தொலைத்தது
ப்ரியா.,கம்சலை இருவர் வாழ்விலும்.,அனர்த்தங்கள் மலர்ந்து ., தாமே தம்மிடமிருந்து தொலைந்துபோகக் காரணமானது ...,எம்.ஜி.ஆர்.......எனும் மிகப் பிரபல்யத்தின்....கரிஷ்மா
இரண்டிலுமே.,பெண்மை பரிதாபமாக அடிபட.,ஆண்மை அரவணைத்துக் கொள்கிறது..........