
புதுவரவாக பூமணியின் “அஞ்ஞாடி” நாவல், ஒன்றரை நூற்றாண்டுகாலம், இருபெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை, மனிதர்களை பிரிக்கும் வன்முறையிலும் ஒளிரும் நட்பு, மண்ணையும் மனிதர்களையும் பிரிக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்... பூமணியின் அற்புத நடையில் .. ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்.. தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்.....
இன்பமும் துக்கமும் நிறைவும் ஏக்கமுமான நினைவுகள்.......... பல தலைமுறை வாழ்க்கையை செறிந்த மொழியில் அடித்த தலைமுறைகளுக்கு அளிக்கும் கலாச்சார மூலதனமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது அஞ்ஞாடி..............
தமிழில் நல்ல நாவல்கள் இருக்கின்றன ஆனால் மிகச் சிறந்த நாவல் இல்லை இன்னும் எழுதப்படாத மிகச் சிறந்த நாவலுக்கு...........
மிக அருகில்.......... வந்திருக்கிறது பூமணியின் ”அஞ்ஞாடி”
என்.சிவராமன்
வாசித்துப்பாருங்களேன்...............!