இன்று எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுதினம்................
”ராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான் ”
"தடக் தடக்" என்று பாசஞ்சர் ரயில் வரும் சப்தம் தண்டவாளங்களில் கேட்க...
நான் ஒரு நிமிஷ தயக்கத்தில் அங்கேயே இருப்பதா அல்லது பாலக்கரைக்கு
போய்விடுவதா என்று தீர்மானிக்க இயலாமல் தண்டவாளங்களின் இடையில் நடக்க
ஆரம்பித்தேன்... இருப்பதா - நடப்பதா இருப்பதா - நடப்பதா
மழை மேகம் போல் புகை கக்கிக் கொண்டு வந்த ரயில் என்மேல் செல்லும் போது எனக்கு பதிலாக அது அலறியது