Friday, May 17, 2013

ஆளண்டாப் பட்சி - பெருமாள் முருகன்



பெருமாள் முருகனின் புத்தம் புதிய நாவல்....... 

ஆளண்டாப் பட்சி........


சகமனிதர்களோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும் சவால். கூட்டுகுடும்ப பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுப்பட்டுப் புலம் பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல்...













நாவல்கள்.........


ஏறுவெயில்...

நகர்மயமாவதன் ஒரு கூறாக காலனி உருவாக்கத்தால் இடம் பெயர்ந்து வாழும் கிராமத்து குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களை சித்திரபடுத்துகிறார் பெருமாள் முருகன்













கங்கணம்.....

பெருமாள்முருகனது நாவல் எடுத்துக் கொண்ட பிரச்சினை இதுவரை தமிழில் யாரும் கையாள முற்படாதது. ஒரு குறிப்பிட்டூகத்ில் திருமணமாகாத, ஆனால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் தணியாத தாகம் கொண்ட ஒரு பேரிளைஞரைப் பற்றிய நாவல் இது. கதை அவன் கல்யாணம் செய்துகொள்வதில் எவ்வாறு வெற்றி அடைகிறான் என்பது பற்றியது



























கூளமாதாரி....

மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்ப்படும் சமூகத்தைச் சேர்ந்த, ஆடுகள் மேய்க்கும் குழந்தைகளின் வாழ்க்கையைப்  பரிவுடனும் பாசத்துடனும் சித்தரிக்கிறது......














மாதொருபாகன்...

இந்த நாவல் திருச்செங்கோட்டின் வரலாற்றை நினைவு கூர்வதல்ல. பிள்ளையில்லாதவர்களின் துன்பத்தைச் சொல்வதல்ல. நம் சமூகத்தில் கற்பொழுக்கம் பற்றிய பிம்பம் மிகச் சமீபகாலமாக வேறுமாதிரிதான் என்று சொல்வதுகூட அல்ல. எல்லாவிதத்திலும் பெண் விடுதலையடைய வேண்டியவள் என்கிற வேட்கையில் எழுந்த புதினமாகத் தோன்றுகிறது.




சிறுகதைகள்...... 














                                   பெருமாள் முருகன்.......