Friday, September 23, 2011

சுஜாதா - கணையாழி கடைசி பக்கங்கள்


சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் ‘நீர்க்குமிழிகள்’, ‘பெட்டி’, ‘கடைசிப்பக்கங்கள்’ எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது.............


”என் எழுத்துக்கு புது வாசகர்கள் அவ்வப்போது பிறந்து வருகிறார் கள். இந்த புதிய ஜன்மங்கள்தான் எனக்கு கிடைக்கும் பரிசுகள். இந்தப் பக்கங்கள் அனைத்தையும் பாரபட்சமின்றி முழுமையாக ஒரு வாசகனின் பார்வையிலிருந்து இப்போது என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்க்கும் எவருக்கும் என் மனமாற்றங்களும் குணமாற்றங்களும் வெளிப்படும். நாற்பது ஆண்டுகளில் ஒருவனுடைய கவலைகள் மாறுகின்றன; பிடிவாதங்கள் தளர்கின்றன; அழுத்தி சொல்லவேண்டிய விஷயங்கள் குறைந்துபோகின்றன. இல்லையேல் என்னை எப்பொழுதோ நிராகரித்திருப்பார்கள்.
கணையாழி தமிழ் இலக்கியப் பத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான முன்னோடி. அதன் வளர்ச்சிக் காலத்தில் கடைசிப் பக்கங்கள் மூலம் கஸ்தூரிரங்கனுக்கு உதவியதில் பெருமைப்படுகிறேன்.”
                                                                                                                  ....................சுஜாதா

4 comments:

  1. தான் படித்து, ரசித்து, கண்டுணர்ந்த.... எல்லாவற்றையும் தனக்கே உரித்தான தனித்தன்மையான எழுத்தில் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட பதிவு....அதுவும் நகைச்சுவை மிளிர...
    படித்து கண்டுணர்ந்தபோது, புரிதலில் எத்தனை எத்தனை ...........புன்னகைகள்

    ..........”தேதா”

    ReplyDelete
  2. சுஜாதாவின் எழுத்துக்கள் காலத்தை தாண்டி நிற்க காரணம் அவர் எழுத்தில் இருந்த இளமைதான்.அவர் எழுத்தில் இருந்த வசீகரம் கடைசி வரை தொடர்ந்து இருந்தது.வயது ஏற ஏற இருந்திருக்கவேண்டிய ஆயாசம் ,அறிவுரை சொல்லும் தன்மை ,இளைய சமுதாயத்தை குறை சொல்லும் தன்மை,நீர்த்து போகும் கொள்கைகள் போன்றவை அவர் எழுத்தில் இல்லாதது அவரின் வெற்றிக்கு காரணம் .

    அன்புடன்
    திருமேனி

    ReplyDelete
  3. sujatha's books are a real feast to who love book reading. He touches all the area such as humour, science and his writings are always a greenary one.
    lalithamballic

    ReplyDelete
  4. சுஜாதா வின் கணையாழியின் கடைசி பக்கங்கள் தொகுப்பு ஒரு சுவாரஸ்யமான புத்தகம் . 30 வருடங்களின் ஓட்டத்தை நாம் படிக்கும் வேகத்தில் கடந்து விடலாம் .என்ன ஸ்ரீரங்கத்து அனுபவங்கள் இதில் அதிகம் இல்லை .பெரும்பாலும் கவிதைகளை அலசும் பக்கங்கள் .புதியன கண்டால் வாசகர்களுக்கு ரிஷி கர்ப்பம் போல உடனே பிரசவித்து விடுகிறார் .அமெரிக்க இங்கிலாந்து அனுபவங்களும் இதில் அடங்கும் .டெல்லி தமிழர்களின் வாழ்க்கை முறையை அவர் பாணியில் அழகாக சொல்கிறார் உதாரணம் " சென்ற முறை வந்த பொழுது ரோட்டில் படுத்து உறங்கிகொண்டிருந்த ஒரு சிறுமியின் பக்கத்தில் இந்தமுறை புதியதாக அவள் தங்கை " என்று சமூக அவலங்களை ஒரு மின்னலை போல சொல்லும் பாங்கு அவரின் தனித்தன்மை. பன்முக திறமை கொண்ட சுஜாதாவின் அனைத்து அவதாரங்களின் சுவடுகளை இதில் காணலாம். ஆபாசத்தையும் இளமையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்த படங்கள் தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றுவிடுவதை போல சுஜாதாவின் வெற்றியின் ரகசியம் நமக்கு புலப்படுகிறது . சுஜாதாவை நேரில் சந்திக்காதவர்கள் இந்த புத்தகத்தை படித்தால் அந்த குறை நிவர்த்தி அடையும் .காரணம் அவர் எதற்கு கோபம் கொள்வார் ,எதை ரசிப்பார் என்பதை போன்ற விபரங்கள் நமக்கு கிடைக்கிறது.1965 ல் ஆரம்பித்து சுமார் 30 வருடங்கள் கணையாழி என்ற புத்தகம் எப்படி இருந்ததோ தெரியாது சுஜாதாவின் எழுத்தில் அந்த கடைசிப்பக்கம் முடிந்துபோனது பலருக்கு இனிய நண்பனை பிரிந்த சோகத்தை தந்திருக்கும் .


    நன்றி
    C . K . திருமேனி

    ReplyDelete