Saturday, March 17, 2012

அறம் - ஜெயமோகன்





இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன் .

 அறம் என்றால் என்ன வென்று பீஷ்மருக்கே தெரியவில்லை.... சாமான்யமான என்னை கேட்கரீங்களே......!

அறம் எனப்து தர்மம் எனில்,
 சாதாரண தர்மம் விசேஷ தர்மம் ஆபத்து தர்மம் 
இதில் ஜெயமோகன் கூறும்
மானுட வெற்றியைக் கொண்டாடும் 
அறம் தான் என்ன..........!

1 comment:

  1. படித்ததில் பிடித்தது

    யானை டாக்டர்-ஜெயமோகனின் சிறு கதை.

    வாழ்வின் அர்த்தங்களை
    யார் எதனுடன் பொருத்தி
    பிழையின்றி காட்சிகளாக்குவது
    ..............இயற்கையைத்தவிர....!

    வேஷங்களைக் கலைந்து...
    வெறுமனே இருக்கமுடியாத
    மானுடத்தின் முன்பு.......
    பறந்து விரிந்த காடும்.....
    அதன் உயிரினங்களும்.

    அற்ப புழுவிற்குள் ஒரே ஒரு கதைதான்
    மானுடப்புழுவுக்குள் எத்தனை எத்தனை கதைகள்..!

    பசுமை வெளியில்.....
    அங்கே வலி உண்டு,நோய் உண்டு, மரணம் உண்டு...,
    ஆனால் கீழ்மை இல்லை....
    ஒரு துளிகூட கீழ்மை இல்லை.........

    காலம் புன்னகைத்தது.

    ReplyDelete