பெருமாள் முருகனின் புத்தம் புதிய நாவல்.......
ஆளண்டாப் பட்சி........
சகமனிதர்களோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும் சவால். கூட்டுகுடும்ப பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுப்பட்டுப் புலம் பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல்...
நாவல்கள்.........
ஏறுவெயில்...
நகர்மயமாவதன் ஒரு கூறாக காலனி உருவாக்கத்தால் இடம் பெயர்ந்து வாழும் கிராமத்து குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களை சித்திரபடுத்துகிறார் பெருமாள் முருகன்

கங்கணம்.....
பெருமாள்முருகனது நாவல் எடுத்துக் கொண்ட பிரச்சினை இதுவரை தமிழில் யாரும் கையாள முற்படாதது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் திருமணமாகாத, ஆனால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் தணியாத தாகம் கொண்ட ஒரு பேரிளைஞரைப் பற்றிய நாவல் இது. கதை அவன் கல்யாணம் செய்துகொள்வதில் எவ்வாறு வெற்றி அடைகிறான் என்பது பற்றியது

மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்ப்படும் சமூகத்தைச் சேர்ந்த, ஆடுகள் மேய்க்கும் குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்தரிக்கிறது......

மாதொருபாகன்...
இந்த நாவல் திருச்செங்கோட்டின் வரலாற்றை நினைவு கூர்வதல்ல. பிள்ளையில்லாதவர்களின் துன்பத்தைச் சொல்வதல்ல. நம் சமூகத்தில் கற்பொழுக்கம் பற்றிய பிம்பம் மிகச் சமீபகாலமாக வேறுமாதிரிதான் என்று சொல்வதுகூட அல்ல. எல்லாவிதத்திலும் பெண் விடுதலையடைய வேண்டியவள் என்கிற வேட்கையில் எழுந்த புதினமாகத் தோன்றுகிறது.
சிறுகதைகள்......

பெருமாள் முருகன்.......
ஆளண்டாப் பட்சி - பெருமாள் முருகன்
ReplyDeleteகூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் சிதைவுகளுக்கு, அப்பன் சொத்தில் பெரும்பகுதி தனக்கு எனும் பேராசையில் துவங்கி, கொச்சைப் படுத்தப்பட்ட மனித உறவை, முத்தாய்ப்பாய் காரணகாரியமாய் வைக்கும் பெருமாள் முருகன்.....
நேர்க்கோட்டில், கூட்டுக்குடும்பத்தின் கடைக்குட்டியான முத்துவின் பார்வைப் படிமானத்திலேயே ’தலித்ஆளுக்காரனுடன்’ ரெட்டை மாடு பூட்டிய வண்டியில், ஒதுங்க இடமில்லாத ஒற்றை மாட்டுத்தடத்தில் கொண்டுசெல்கிறார்.
உழைக்கத் தயாராய் இருக்கும் தனி மனிதன், நில உடமைக்காரன் ஆகிறான். உழைக்கத் தயாராய் இல்லாமல் சோம்பேரியாய், ஒற்றுமையின்றி, குடித்துக் கூச்சல் இடும் கூட்டுக்குடும்பம் நிலத்தை விற்றுத் தின்கிறது.
வீராப்பு மிகுந்த ஜாதீயம், தன்னைத் தாண்டி மரமேறியாக உழைக்க தயாராகுகிறான்.
தஞ்சைப் ப்ரகாஷின் “கரமுண்டார் வீடு” கதைமாந்தர்கள் போல, குடியிலும் கூத்திலும் காமத்திலும் புரண்டு இடம் மாற்றம் செய்யும் புரட்சியெல்லாம் இல்லாமல், வருஷத்துக்கு பேசிய தலித் ஆளுக்காரனுடன் மனிதம் பேசும் கடைக் குட்டியான நாயகன் ஊர்க்கட்டுப்பாட்டிற்க்கு எங்கு நிற்க்க வேண்டுமோ அங்கு நிற்க்க வைத்துவிடுகிறார்.தன்னளவில் ஜாதீயம் தாண்டிய அரவணைப்பை இயல்பாய் செய்கிறார்.....
தனி மனிதன், தனிக்குடும்பம் இவர்களின் உழைப்பால் நிலம் பண்படுகிறது கூடவே வரும் தலித் ஆளுக்காரன் தவிர, சொந்த சகோதரர்கள் பங்காளிகளாகப் போக, மாமன் மச்சான் தோள் கொடுக்க, நானாவித ஊர்க்காரர்கள் ஆங்காங்கே பரிமளிக்க.....
எனது நண்பர் பாண்டிச்சேரி கண்ணன் கூறியது போல “சின்ன கவுண்டர் காடு வாங்கிய கதை இது”....