Wednesday, November 6, 2013

பா. ராகவன்........ அலகிலா விளையாட்டு

”செயலையும் தியானத்தையும் எவனொருவன் சேர்த்து அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தை கடந்து தியானத்தால் பிறவா நிலையை அடைகிறான்.

எனக்கு தியானம் வசப்பட்டதில்லை .

செயலில் சிறந்து நின்றதுமில்லை .

புத்தியின் பேய்க்கூச்சலில் அலைக்கழிக்கப்பட்டு அடித்து செல்லப் பட்ட தக்கை நான்.

கற்ற எதையும் பயன்படுத்தத் தெரியாமல் துருப் பிடிக்க விட்டவன்.

காலம் முடிந்து விட்டது .

கடைசிப் படியில் அது தட்டுப் படுமா என்று நப்பாசை கொண்டு நிற்கின்றேன்.

எப்படி அவளுக்கு புரிய வைப்பேன்.” 

அலகிலா விளையாட்டு
இலக்கியப்பீடம் விருது வென்ற பா.ராகவனின் அலகிலா விளையாட்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய பதிப்பு காண்கிறது. பிரமிப்பூட்டும் மொழி நடையாகவும் திகைக்கவைக்கும் நுணுக்கமான விவரங்களாகவும் நேர்த்தியாகவும் மிகவும் பாராட்டப்பட்ட நாவல் இது.

No comments:

Post a Comment