Monday, April 18, 2011

நாஞ்சில் நாடன்............ படைப்புகள்.............



அரசியலும் அதிகாரமும் கட்டவிழ்த்துவிடும் சமூக அநீதிகளைச் சகித்துக்கொண்டு சுரணை கெட்டுக் கிடக்கும் தமிழ்ச்சமூகத்தின்
அற உணர்வைத் தட்டி எழுப்புவதை தன் எழுத்தின் காரியம் என்று உறுதி கொண்டிருப்பவர்
நாஞ்சில் நாடன் ......
மண்ணில் இருந்தும் மனிதரிலிருந்தும் முளைத்து எழுபவை அவரது கதைகள்.......
நிராகரிப்பின் துயரிலிருந்து திரண்டு எழுவது அவரது மொழி ..... அவரது மெய்யான வாசகன் அவருடைய  ஒவ்வொரு படைப்பையும் படித்துமுடித்தவுடன் தலை குனிவையே அடைவான் ..............
இதுகாறும் சமூகம் சார்ந்தும் சகமனிதர்கள் சார்ந்தும் பொறுப்பின்மையுடன் நடந்து கொண்டமைக்காக உள்ளூர வருந்துவான்.
 வாசகனின் இந்த சுயபரிசீலனையை சாத்திய படுத்துவதால்தான் நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள் இலக்கியமாக ஆகின்றன....

நன்றி - ”மணல்கடிகை - எம் கோபாலகிருஷ்ணன்” ................ சூத்திரதாரி.


நாவல்கள்
தலைகீழ் விகிதங்கள்
 என்பிலதனை வெயில் காயும்
மாமிச படைப்பு
மிதவை
சதுரங்கக் குதிரை
எட்டுத்திக்கும் மதயானை

 சிறுகதைகள் 
தெய்வங்கள் ஒநாய்கள் ஆடுகள்
வாக்குபொறுக்கிகள்
பேய்க்கொட்டு
பிராந்து
முத்துக்கள் பத்து
நாஞ்சில் நாடன் கதைகள்
சூடிய பூ சூடற்க - சாகித்திய அகாதமி பரிசுபெற்ற நூல்
கான் சாகிப்


கட்டுரைகள்
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
காவலன் காவான் எனின்
தீதும் நன்றும்
திதம்பரம்

கவிதைகள் 
                                     மண்ணுள்ளிப் பாம்பு
                                     பச்சைநாயகி


  ம்பராமாயணக் காவலர் 
நாஞ்சிலாரின் எழுத்துப்பணி தொடரும்................
www.nanjilnadan.wordpress.com






1 comment:

  1. படித்ததில் பிடித்தது - நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை ........ நாஞ்சிலாரின் தார்மீக கோபம்.........
    நதியின் பிழையன்று எனில் எவர் பிழை? வான் பொய்த்தது. குலகொடிதானும் வரண்டது.சுழன்றும் ஏர்ப் பின்னதாஉலகம்? சீர்த்த முளைபற்றி வாங்க குடம் நிறைத்த வள்ளற் பெரும் பசுக்கள் ஆயிர்பாடி நீங்கி ஏதிலிகளாய்,காமக்கடை விரிக்கும் கனவுத்திரைச் சுவரொட்டிகளைப் பெரும்நகர்ப்பாலை மதில்கள் தோரும் மேய்கிற அவலம்... நெஞ்சுபொறுக்குதில்லை நாஞிலுக்கு... மேழி பிடித்த கைகுவித்து ஆற்றுநீரை அள்ளிப்பருகியவர் இன்ரு மினரல் வாட்டரை விலைகொள்ளும் பதற்றம்;வாழ்வாங்கு வாழ விழைபவர் மக்களே போல்வரொடு வழி நடக்க நேர்வதன் பரிதவிப்பு; இழிதகையோர்கோன்மை அவையில் நிலவக் கண்ட ஆற்றாமை; அரசிய்ல் பிழைத்தோர் பரத்தமைக்கு நிகரென அறத்தை ஆக்கிய காலத்தில் நிற்கும் கைப்பு; எட்டுத்திக்கும் மதயானை. என் செயலாம் இந்த உலகியற்றியானை? என் செய்வான் கனியன் பூங்குன்றனின் மாணாக்கன்? ஆவநாழியில் என்ஞியவை சொற்கள்தான்.
    நாஞ்சில் நாடன் தொடுக்கும் பொது ஒன்று; தைக்கும் போது ஓராயிரம்!
    .........ஓராயிரம் பல்லாயிரமாகப் பெருகவேண்டும் பராசக்தி.............

    “தேதா”

    ReplyDelete