Saturday, April 2, 2011

கிருஷ்ணா........கிருஷ்ணா......... இந்திரா பார்த்தசாரதி

 கிருஷ்ணன், கிருஷ்ணனாகப் பிறக்கவில்லை ...... உருவாக்கப்பட்டான்......................

இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா கிருஷ்ணா', மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. இ.பா.வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக் கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான். கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார். அந்தக் கனவின் சமகால நீட்சி, இந்த புத்தகம்......

3 comments:

  1. கிருஷ்ணன் கிருஷ்ணனாக பிறக்கவில்லை.....
    உருவாக்கப்பட்டான்... நல்ல தலைப்பு....

    அப்படியானால்-------
    கிருஷ்ணன் என்பவன் யார்?

    ReplyDelete
  2. கிருஷ்ணரை புதன்னைப் படுத்தி,முழுமையாகவும் எளிமையாகவும் திறன்பட ஆசிரியர் தொகுத்திருக்கிறார்.
    இந்நூற்றாண்டின் இலக்கிய நடையில் கிருஷ்ணரின் லீலைகளை அழகாக வர்ணித்திருக்கிறார். ஜரா என்ற வேடனிடம் நாரதர் கூறும் கதை,நம் முன்னே நேரில் நாரதரைக் கொண்டு கூறுவது போல் அமைந்து இருப்பது இந்நூலின் சிறப்புகளில் ஒன்று. பகவத்கீதை பிறந்த கதையை எவரோருவரேனும் படித்து புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதியிருப்பது மற்றொரு சிறப்பு..... திருக்குறளும்,கீதையும் “எல்லா தலைகளுக்கும் பொருந்தும் குல்லாய்” என்பது நாம் வாழும் சமுதாயத்திற்கு பொருந்துவது போலும் இந்நூலினை வாசிப்பவர்களுக்கு மேன்மேலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்நூலின் மூலம் ஏற்படுத்துகிறார்.......


    .....கற்பகம்

    ReplyDelete
  3. இந்திரா பார்த்தசாரதியின் சமீபத்திய படைப்பான கிருஷ்ணா கிருஷ்ணாவைப் பற்றி ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். நண்பர் தியாகு நடத்தும் வாடகை நூல் நிலயத்தில் அந்த நூலைப் படித்தவர்களில் அநேகமாக அனைவருமே அதன் பிரதியைத் தங்களிடமே வைத்துக் கொள்ள விரும்பினர். அந்த வகையில் தியாகுவே ஏறக்குறைய 80 பிரதிகளைத் தருவித்துக் கொடுத்திருக்கிறார் என்பதையும், இன்றும் அந்த நூல் எளிதில் வகுத்துக்கொள்ள இயலாத ஒரு நவீன ஆக்கமாக, மாறாது கவர்ந்திழுக்கும் ஒரு நூலாகத் திகழ்கிறது என்பதையும் சொல்ல ஆசைப்படுகிறேன்...........சுரேஷ்.வெ.

    ReplyDelete